பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சங்க இலக்கியம்

கி. பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் காலத்திலேயே இசை மரபு அருகியது. ஆனால் முற்றிலும் மறைந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறும் பழந்தமிழர் இசையினைப் பற்றிய குறிப்புக்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றன. இந்த நூற்றாண்டிலே நாடெங்கும் பரவி நின்ற இசை திருக்கோயில்களுக்குள்ளே அடங்கிக் கிடக்க நேர்ந்தது. அது மக்களிமிடருந்து மறைந்து கோயில்களுக்குச் செல்லும் ஒருசில அடியவர்கள் மட்டும் சிறிது நேரம் பக்திச் சுவைக்குக் கேட்கும் இசையாகத் திகழ்ந்தது. அதுவும் இல்லையேல் மறைந்தது போன்றிருக்கும்.

பிற்காலத்தில் இசை

விசயநகர ஆட்சியில் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அலாவுதீன் கில் ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர் தென்னாட்டின் மீது படையெடுத்தான். விந்த மலைக்குத் தென்பாற்பட்ட யாதவ அரசு, காகதீய அரசு, கொய்சல அரசு, பாண்டிய அரசு என்பவை அச் சேனைத் தலைவர் முன் தலைதாழ்ந்தன. தமிழகம் அவரது படை யெடுப்பால் நிலைதளர்ந்தது. முஸ்லீம்களைத் தடுத்து நிறுத்தி இந்துக்களைக் காக்கவேண்டும் என்ற உணர்ச்சி யுடன் பல்லாரி மாவட்டத்தில் விசய நகர அரசு ஏற்பட்டது. அந்த அரசர்கள் கன்னடத்தையும் தெலுங்கையும் வளர்த் தனர். ஆந்திர இசையையும், கருநாடக இசையையும் வளர்த்தனர். நடுவில் இந்த இரண்டும் ஒன்றாகிக் கர்நாடக இசை என்றே வளரலாயிற்று.

துங்கபத்திரை ஆறு முதல் கன்னியாகுமரி வரை உள்ள நாடு விசயநகர ஆட்சிக்குட்பட்டது. விசயநகர வேந்தர்க்கு அடங்கிய நாயக்கர் ஆட்சி மதுரையிலும் தஞ்சாவூரிலும் செஞ்சியிலும் ஏற்பட்டன. அதனால் ஆந்திரமும் கர்நாடக மும் தமிழ்நாட்டு அரசாங்க அலுவலராகத் தெற்கே குடியேறி னர். இந்த மாறுதல் களால் தமிழ்நாட்டில் கர்நாடக இசை