பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ பார்வைகள் 223

_மு பரவத் தொடங்கியது. இங்ஙனம் ஏற்பட்ட _சிமுறை மாறுபாட்டால் புதிய ம ன் ன ர் க ைள அன்புறுத்திப் பரிசுபெறத் தமிழ் இசைவாணர் கர்நாடக ஆசையைக் கற்கலாயினர். இப் புதிய போக்கினால் தமிழகத்தில் வாழையடிவாழையாக இருந்து வந்த தமிழிசை //அசிறிதாக மறைந்தது. தெலுங்குப் பாடல்கள் செல் அங்குப்பெற்றன.

பிறங்ாட்டு இசைகள்

இஸ்லாம், கிறித்துவம் என்னும் இரண்டு புதிய சமயங் கான் நுழைவாய் அச் சமயங்களைத் தழுவிய தமிழர் கைதுஸ்தானி இசையையும், மேனாட்டு இசையையும், க/காலாயினர். கிறித்துவக் கோயில்களில் இன்றளவும் ாமனாட்டு இசையே இருந்து வருகிறது. அந்த இசையில் தமிழ்ப் பாடல்களும் பாடப்பெறுகின்றன.

இருபதாம் நூற்றாண்டில் இசைக்கலை

ஆங்கில இசையில் Band இசை தமிழகத்தில் பரவியது. துன்றும் பல திருமணங்களில் அவ் விசையை நாம் கேட் கிறோம். நம்நாட்டு நாதசுரம் அழியாமல் இருந்து வரு கிறது. பண்டைக்காலப் பறை, சங்கு, முரசம், உடுக்கை, தாழம், கொம்பு முதலிய இசைக்கருவிகள் சிற்றுார்களில் நிலைத்து இருந்து வருகின்றன. ஏற்றம் இறைக்கும் பொழுதும், நாற்று நடும்பொழுதும், கனமான பொருளை இழுத்துச் செல்லும்போதும், நெடுந்துாரம் வண்டிகளை இழுத்துச் செல்லும்போதும், சுண்ணம் இடிக்கும்பொழுதும் அவ்வத் தொழிலில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் பாக்களைப் பாடுகின்றனர். இவ்வாறு பாடும் வழக்கம் சங்க கால முதலே இருந்து வருகின்றது. குழந்தைகளை உறங்க வைக்கும் தாலாட்டுப் பாடலும் பழமையானது. ஏறத்தாழ 10 ஆண்டுகட்கு முன்வரையில் தமிழிசை இன்னிசை அரங்குகளில் தெலுங்குப் பாடல்களே ஆட்சி புரிந்தன. தமிழ்