பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள்

அமெரிக்கர்களுக்கு வரலாற்றுப் பழமை இல்லை. உருசியர்கள் பழமையைப் போற்றுவதில்லை. புதுமையை உயர்த்திப் பேசுவதில் இருநாட்ட வரும் ஒன்றுபடுகின்றனர். இலக்கியங்களையும் அவற்றின் ஊடகங்களாகிய மொழி களையும் கூட அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்கின்ற போக்கு இன்று வளர்ந்துவிட்டது. இலக்கியத்தை மனித நேயவியல் (Humanology) என்கிறார் மாக்சிம் கார்க்கி.

கணிப்பொறியின் துணைகொண்டு .ெ ச ய ற் ைக நுண்ணறிவை (Artificial Intelligence) உருவாக்க இயலும் என்னும் அளவிற்கு அறிவியல் வளர்ந்து கொண்டு இருக் கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளும் பயன்களும் மனிதனின் வாழ்க்கையை எளிமை யாக்குமேயன்றி இனிமையாக்க இயலாது என்றும் அந்த ஆற்றல் இலக்கியத்திற்கே உண்டு என்றும் கூறுகிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் . இலக்கியமும் அறிவியலும் மனிதனின் இரு கண்கள் என்று கருதுவதே சாலச் சிறந்தது.

மாறி வரும் அறிவியல் உண்மைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் இயற்கையைப் பற்றிய அறிவியலாரின் கருதுகோள்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தன. காற்றை ஒரு தனிப்பட்ட வளிமமாகவும். நீரை ஒரு தனிப்பொருளாகவும், தீயை ஒர்