பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சங்க இலக்கியம்

இடி மின்னல் பற்றிய கருத்துக்கள்

துஞ்சுவது போல இருளி விண்பக இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு ஏறுவது போலப் பாடுசிறந் துரை இ கிலம்நெஞ்சு உட்க ஒவாது சிலைத் தாங்கு ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்

-அகநானூறு 189:1-5

மலை இமைப் பதுபோல் மின்னி சிலைவல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே

-நற்றின்ைன. 112:8.9

ஆகியனவும் அவை போல்வன பிறவும், மழைக்காலத்தில் மின்னல் முதலிலும் இடி பின்னரும் தோன்றும் என்று சான்றோர் கூறினர். அவ்வளவோடு நில்லாமல் காலை நேரத்தில் இடிக்கும் இடி கடுமை வாய்ந்தது என்றதொரு குறிப்பினை அகநானூற்றுச் சான்றோர் ஒருவர் உரைத்துள் ளார். இதுவும் அறிவியல் அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட புலம் என்று கூறலாம்.

காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ

-அகநானூறு 174:7

என்பது மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார் கூற்று.

பேய்த்தேர்

ஒரே ஊடகத்தின் (medium) அடர்வு வேறுபாட்டினால் ஒளிக்கதிர்கள் ஒளிரும்போழ்து விலகல் ஏற்பட்டுக் கண்ணிற் குப் பொய்த் தோற்றமான ஒரு காட்சியை உருவாக்கு கின்றன. இதுவே கானல் நீர் (mirage) என்று அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அகநானூற்றுப் பாடல் ஒன்றின் பகுதி இந்தக் கருத்தினை விளக்குவது போல் தோற்றம் அளிக்கின்றது.