பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 சங்க இலக்கியம்

நல்லது என்றும் இச் சித்தர் பரிந்துரைப்பதாகக் கொள்ளலாம். மரத்தின் பிடியிலிருந்து காய் விழும்பொழுது காம்புப் பகுதி யிலிருந்து இயல்பாகவே பால் வடிவதை நோக்கலாம். ஆயின் தேங்காய்ப்பால் அதன் துருவல்களைப் பிழிவதால் கிடைக்கும். இதனால் தேங்காயின் வடிவம் அழியும். மாங்காய்ப் பாலினால் காயின் வடிவமோ சுவையோ எடையோ சிறிதும் குன்றுவதில்லை. மனிதன் தன் ஆற்றலை உறுப்புக்களின் மிகுசெயல்பாட்டில் செலவழித்து வேதியியல் நோக்கில் உயிரைத் தேய்த்து மாய்கிறான். ஆற்றலைப் பாதுகாக்கும் பயிற்சியை மனிதன் பெற வேண்டும் என்பதைத்தான் குதம்பைச் சித்தர் குறிப்பாகப் பாடியிருக்கிறார். எனவே மாங்காய்ப்பால் என்பது மனத் தால் கிடைக்கும் இன்பத்தினையும் தேங்காய்ப் பால் என்பது உடல்வழி கிடைக்கும் விலங்கியல் இன்பத்தையும் சுட்டுகின்றன. உடல் இல்லாமல் மனம் இயங்க வாய்ப்பு இல்லையாதலால் உடலுக்கும் மனத்திற்கும் இடையே இடையறாத வேதியியல் நிலைவினை (Chemical reaction) நடைபெறுகிறது என்றும் இதனால் ஏற்படும் விளைவுகளை 2-t–dò - 2-cirer inrgum Geheir (Psychosomatic changes) எனவும் கூறுவர். இத்தகு அணுகுமுறைகளை மன வேதியியல் முறை எனவும் அழைப்பர் (Mental Chemistry Method) வேதியியல் வினையாக்கத்தினைப் பின்வரும் கலித்தொகை அடிகள் குறிப்பால் உணர்த்தும்.

திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய மருந்து போல்மருந் தாகிமனன் உவப்ப

-பாலைக்கலி 16:19.20 பெரும்பானற்றுப்படையில், தன் இயல்பிலிருந்து சுருங்கிய மாவடு பற்றிய குறிப்பு உள்ளது. வேதியல் மாற்றத் தினால்தான் உப்பிடப்பட்ட மாவடு, நீர்ம நிலையில் சுருங்கு கிறது எனவும் இதனைச் சவ்வூடு பரவல் (Osmosis) என்றும் இயல்பு வேதியியல் (Physical Chemistry) வல்லுநர் கள் கூறுவார்கள். வேதியியல் அடிப்படையில்தான் மாவடு