பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 சங்க இலக்கியம்

பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ இருண்டு உயர்விசும்பின் வலனேர்பு வளைஇ போர்ப்பு உறுமுரசின் இரங்கி, முறைபுரிந்து

மின்னுடைக் கருவியை ஆகி நாளும் கொன்னே செய்தியோ அரவம்?

-அகநானூறு 188:1-8 என வரும் அடிகளில் இவை மூன்றும் குறிக்கப் பெற்றமை நோக்கற்குரியது. நல்வெள்ளியார் (நற்றிணை 7:3-6) பேரி சாத்தனார் (நற்றிணை 104:9.12) மதுரை மருதனிள நாகனார் (அகம் 312:10.14), மாறோக்கத்து நப்பசலையார் (புறம் 174:24.28) ஆகிய சான்றோர்களின் பாடல் பகுதி களும் இக் கருத்திற்கு அரணாய் அமைகின்றன. பகல் நேரத் தில் மின்னலைவிட இடியே மனிதனை வெகுவாகப் பாதிப்ப தால் மின்னலைப்பற்றிய குறிப்பு சில பாடல்களில் இல்லாமற் போகலாம். கதிரவன் ஒளிக்கு அது ஒப்பாகாமையால் அதனை அறிஞர்கள் கூறாமல் விடுத்திருக்கலாம். இதுவும் மனத்தில்கொள்ளவேண்டிய ஒரு செய்தி.

கரைப்பான் (Solute) கரைபொருள் (Solvent) கரைதிறன் (Solubility) #5og *óó (Solution) <},āu6oT li ğğu 6l,Ftù & &#65) 5HT அறிஞர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். “செம்புலப் பெயல் நீர்’ எனும் அரியதொடர் ஒன்றே இதனை விளக்கப் போதுமானதாகும். மழை நீரில் பல பொருள்கள் கரையும். எனவே மழைநீர் ஒரு கரைப்பான். செம்புலத் திலுள்ள சில உப்புக்கள் நீரில் கரைந்தன. அவை கரை பொருட்கள். இரண்டும் சேர்ந்து கரைசலாக மாறுகின்றன. அன்புடை நெஞ்சம் தாம் கலந்தன என்ற வெளிப்பாடு இஃது ஒரு வேதியல் மாற்றம் என்பதை நினைவுபடுத்தும். அண்மைக் காலத்தில்தான் தண்ணிரில் கரையும் பொருட்கள் “குளோரைடு, கார்பனேட்’ என்று கண்டுபிடிக்கப்பட்டன. தமிழக மக்கள், உப்பு நீரில் கரையும் என்ற எளிய