பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் - 21

உரோம வாணிகத்தின் நிலை தளர்ந்ததைப் பி. டி. சீனிவாச ஐயங்கார் தம் தமிழ் வரலாற்றில் கூறியுள்ளார்.

தமிழர் வணிகம் செய்த தன்மையைப் பட்டி னப் LJITбUD da),

நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கலி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென் கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெறிய ஈண்டி வனந்தலை மறுகிய நனந்தலை மறுகு

என்று குறிப்பிடுகின்றது.

மேற்கூறியவற்றால் தமிழ்நாட்டின் தொன்மையும், அக்

காலத்திலேயே அது சிறந்து விளங்கின வரலாறும் தென் படுகின்றன.

>< ዅ