பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தமிழ் இனத்தின் தொன்மையும் சிறப்பும்

TSCSCSCSCSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

திராவிட இனத்தின் தோற்றத்தைப் பற்றிப் பலவகைப் பட்ட கருத்துக்களை அறிஞர் பெருமக்கள் தெரிவித் துள்ளனர். அவற்றை நாம் இரண்டு வகையாகப் பகுத்துக் காட்டலாம். அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே என்பது முதல் கருத்து. இந் நாட்டில் தோன்றி வாழும் பழங்குடி மக்களே திராவிடர் என்பது இரண்டாவது கருத்து. இக் கருத்துக்களை இவண் காண்குவம்.

தமிழர் ஒரு தனி இனத்தவர். பிற இனத்தவருள் ஒர்

உட்பிரிவினர் அல்லர் என்பது பல்லாண்டுகளாகத் தொடர்ந்து செய்த ஆராய்ச்சியின் முடிபாகும். தஸ்யூக்கள் என்றும், கீழ்மக்கள் என்றும், சுமேரியர் இனத்தைச்

சார்ந்தவர் என்றும், பிராகுவி மொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவர் என்றும் தமிழர் வழங்கப் பெற்ற காலம் மலை யேறி விட்டது. டாக்டர் ஜி. யு. போப், டாக்டர் கால்டுவெல், ரேகோசின், சர். ஜான்மார்ஷல், டாக்டர் எச். ஆர். ஹால் போன்ற வெள்ளையர்கள் காட்டிய வழிபற்றிச் சென்று ஆராய்ந்த ஆராய்ச்சியின் முடிபே தமிழர் ஒரு தனி இனத்தவர் என்றும் தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் கொள்கைகளும் உடையவர் என்றும் துணிந்து கூறுதற்கு இடமளித்தது என்பர் டாக்டர் மொ. அ. துரை அரங்கனார்.

ஆரியர் இவ்விந்திய நாட்டின் வடமேற்கே புகுந்து குடியேறுவதற்கு முன்பே இவ்விந்திய நாடு முழுவதும் பரவி யிருந்தவர்கள் தமிழ் மக்களும் அவர்க்கு இனமான திராவிட