பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சங்க இலக்கியம்

மைசூர் மாநிலத்தில் உள்ள பிரமகிரி என்னும் இடத்தில் செய்யப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் விளைவாகத் தென்இந்தியாவில் புதுக்கற்காலத்திலிருந்து இயல்பாகவே இரு ம் பு க் கால ம் தோன்றவில்லை; புகுத்தப்பட்டது. என்பதைத் தெரிவிக்கின்றார். திராவிடர்கள் ஈரானிலிருந்து பலுசிஸ்தானத்தின மூலம் நிலவழியாகவே இந்தியாவிற்குள் துழைந்து இருக்கவேண்டும். மைசூர் மேட்டு நிலத்தை அடையும்வரை அவர்கள் மேலைக் கடற்கரையோரமாகவே தென்னாட்டிற்குள் சென்றிருக்க வேண்டும்’ என்று எய்மண்டார்ஃப் விளக்கம் தருகின்றார். இக் கொள்கை கி.மு. 5ஆம் நூற்றாண்டளவில் திராவிடர் தென்னிந்தியாவில் குடியேறினர் என்னும் கருத்தை வலியுறுத்துவதாகும்.

பிரமகிரியில் கிடைத்துள்ள பழம்பொருட் சின்னங்களைச் சர்மார்ட்டிமர் விளர் என்னும் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் டைரக்டர் ஜெனரல் நேரில் ஆராய்ந்து பார்த்து அவையாவும் கி.மு. 200இல் தென் இந்திய மக்கள் பயன்படுத்தியவை என மொழிந்துள்ளார். இவண் இருவரும் கருத்து வேறுபாடு அடைகின்றனர். இக் கருத்து வரலாற்று வழுவுடையதாகும்.

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தோன்றுவதற்குமுன் பல இலக்கியங்கள் தோன்றி முதிர்ந்த நிலையில் இருந்திருக்கவேண்டும். இலக்கணம் எழுதப்படுவது முதிர்ந்த நிலையில் உள்ள இலக்கியங்கட்கே அன்றி அப்பொழுது தோன்றிய இளம் இலக்கியங்கட்கு அன்று. தொல்காப்பியர் காலம் பாணினிக்கு முற்பட்டது. பாணினியின் காலம் கி.மு. 4ஆம் நூற்றாண்டு. திராவிடர் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வந்து இருந் தால், “தமிழ் இலக்கியம்’ எக்காலத்தில் தோன்றியது; எந் நாட்டில் தோன்றிற்று” என்ற ஐயம் எழுகிறது.

இவ்வாறே கி.மு. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகன் தன் கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர்