பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 27

களைக் குறிக்கின்றான். இவற்றையெல்லாம் நோக்கும்போது கி.மு. 5ஆம் நூற்றாண்டளவில் திராவிடர்கள் இந்தியாவிற்குள் புகுந்தது உண்மையன்று என்ற முடிவிற்கு வருதலே சாலச் சிறந்தது.

சென்னைப் பல்கலைக் கழகத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறைத் தலைவரான பேராசிரியர் டாக்டர் டி.வி. மகாலிங்கம் என்பவர் ‘தென்னிந்தியாவில் தொல் பொருள் ஆராய்ச்சி’ என்னும் கட்டுரையில் புயூரர் எய்மண்டார்ப் கருத்தினை முடிந்த முடிவாகக் கருதாது தொல்பொருள் ஆராய்ச்சி தரும் ஒளியைக்கொண்டுதான் இருள்சூழ்ந்த தமிழரின் தாயகத்தைக் கண்டறியவேண்டும். அதுவரையில் தமிழரின் தாயகம் பண்டையக் காலத்திய தமிழகமே என்று கொள்வது பொருத்தமுடையது என்பார்.

இவ்வாறு கருதுதற்குரிய காரணங்கள்:

1. பழந்தமிழ் இலக்கியங்கள் என்று போற்றப்படும் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியங்கள் ஆகிய நூல்களுள் தமிழர் அயல் நாட்டிலிருந்து கடல் வழியாகவோ, நில வழியாகவோ தமிழகத்தில் வந்து குடியேறியவர் என்பதற்குரிய சான்றுகள் இல்லை. அதற்கு மாறாகத் தமிழகத்திற்குத் தெற்கே பரந்து இருந்த நிலைப்பரப்பினைக் கடல் கொண்டது என்றும், அவ்வாறு கடல் கொண்ட பொழுது எல்லாம் அங்குக் குடியிருந்த பண்டைத் தமிழர் வடக்கு நோக்கிக் குடியேறிய வண்ணம் வாழ்ந்தனர் என்றும் சங்க இலக் கியங்கள் யாவும் குறிப்பிடுகின்றன.

2. பழந்தமிழ் இலக்கியங்களுள் குளிர்நாட்டுக்குரிய செடி, கொடிகள், மரங்கள். விலங்குகள், வேறுபல உயிரினங்கள் ஆடைஅணிகள், உணவுப் பொருள்கள் பற்றிய குறிப்புக்களைக் காண முடியவில்லை. தமிழகத் தில் குடியேறுவதற்கு முன்பு கோதுமை பார்லி தமிழரின்