பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சங்க இலக்கியம்

உணவுப் பொருட்களாக இருந்திருந்தால் குடிபுகுந்த நாட்டிலும் அவற்றை ஓரளவிற்குப் பயன்படுத்தியிருத் தல் வேண்டும். அவற்றைப் பற்றிய குறிப்பு மேற்கண்ட நூல்களில் யாண்டும் காணோம். தமிழருடைய உணவுப் பொருளாகப் பண்டைக் காலத்தில் செந்நெல், வரகு, கேழ்வரகு, சாமை முதலியன இருந்தன என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்களால் அறிகிறோம்.

ஒரு மொழியில் உள்ள சொற்களில் மிகப்பழமையானவை. . எளிதில் மாறாதவை - வினைச்சொற்கள் திசைப் பெயர்கள் முதலியவை, அவற்றுள் திசை பற்றிய பெயர் பழமை வாய்ந்தனவாக இருக்கவே ஞாயிறு தோன்றும் திசையை முதலாகக் கொண்டு பல திசைக்கும் அடையாளங் குறித்துப் பெயர்களை வழங்கினர். இவ்வாறு திசைகட்குப் பெயரிடுதல் நாகரிகத்தின் அடையாளம் என்பர். தமிழ்மொழியில் திசைக் குரிய பெயராகக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு வழங்குவ தோடு அவ்வத் திசைகளில் இருந்து வீசும் காற்று. ஒவ்வொன்றிற்கும் திசையின் அடிப்படையில் பெயரிட்டு வழங்கினர் பண்டைத் தமிழர். கீழ்க்காற்றைக் கொண்டல் என்றும், மேல்காற்றைத் கோடை என்றும், வடக்கிலிருந்து, வரும் காற்றை வாடை என்றும், தெற்கிலிருந்து வரும் காற்றைத் தென்றல் என்றும் காரணப் பெயரால் குறிப் பிட்டனர். இவ் வழக்கினை.

கொண்டலொடு புகுந்து -சிலப். 14, கா. வரி 110

கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட வேனில் வேந்தன் -சிலப், 14, கா. வரி 123-124

கார் அரசாளன் வாடையொடு வரு உம்

-சிலப். 14. கா. வரி 39

தென்னவன் பொதியம் தென்றலொடு புகுந்து

-சிலப். 14. கா. வரி 115

என்று இளங்கோவடிகள் கூறியுள்ளமையால் அறியலாம்.