பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சங்க இலக்கியம்

விகுதிகள் முதலியன நிறைந்ததொரு பொருட் காட்சிச் சாலை போன்றது. வழக்கற்ற சொற்கள் பொருள் மாறுபாடு அடைந்துவிட்ட சொற்றொடர்கள் தமிழில் பல; எடுத்துக்காட்டாகப் புறநானூற்றில் பிசிராந்தையார் பாடலில் வரும் ஒரு தொடரைக் காணலாம்.

மாண்ட என் மனைவியொடு மக்களும் கிரம்பினர்

இதில் “மாண்ட” என்ற சொல்லுக்கு மாட்சிமைப்பட்ட என்று பொருள். ஆயின் இன்றோ அச்சொல் இறந்து பட்ட என்ற பொருளைத் தருகின்றது. அது போன்றே நாற்றம், கழகம் போன்ற சொற்களும் பொருள் மாற்றம் அடைந்துள்ளன.

படைக்குப் பிந்தி பந்திக்கு முந்தி என்ற தொடரும் ஒரு காலத்தே பொருள்மிக்கதாகத் திகழ்ந்தது. இப்போது பொருள்மாறி எள்ளல் பொருளாக வழங்கப்படுகின்றது. அதோளி, இதோளி போன்ற சொற்களும், பல அளவைப் பெயர்களும், இப்போது வழக்கற்றுப் போய்விட்டன. இவ்வாறெல்லாம் சொற்கள் வழக்கற்றுப் போவதற்கும் பொருள் மாறிப் போவதற்கும் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பதை எண்ணுழித் தமிழின் தொன்மை நன்கு புலனாகின்றது.

4) தமிழின் பழமைக்கும் தூய்மைக்கும் மற்றொரு சான்று. அது பழங்கன்னடம் பழந் தெலுங்கு போன்ற மொழிகளோடும் துதம், கோண்டு, கூ, துளு போன்ற பழங்குடி மக்களின் மொழிகளோடும் ஒற்றுமை யுடையதாய் இலங்குவதாகும். பல இடங்களில் இக் காலக் கன்னடமும் தெலுங்கும் தமிழுக்கு மாறுபட் டிருப்பினும் பழங்கன்னடம் முதலிய பழைய மொழிகள் தமிழை ஒத்திருக்கின்றன. இவ்வாறு மிகப் பழைமை யான மொழிகளோடு தமிழ் ஒத்திருப்பதைக் காணுங் கால் தமிழின் தொன்மையும் சிறப்பும் தெளிவுறும்.