பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 35’

5) தமிழில் உள்ள கொச்சைச் சொற்கள் எல்லாம் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கண வழக்காகப் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. தமிழில் ஒன்று என்பது கொச்சையாக ஒண்ணு’ என்று வழங்கப்படுகிறது. அதுவே மலையாளத்தே ஒன்று’ என வழங்கப்படுகிறது. தமிழில் இரண்டு என்பது கொச்சையாக ரெண்டு என்று வழங்கப்படுகிறது. தமிழில் உள்ள நான்கு என்பது கொச்சையாக நாலு” என வழங்கப்படும். கோண்டு மொழியில் நாலு என்றே வழங்கப்படுகிறது. தமிழின் கொச்சை மொழியான ‘இரண்டு என்பன தெலுங்கில் இலக்கண வழக்காகப் பயின்று வருகிறது. தமிழில் அமைந்த படுஞாயிறு” என்பது மிகத்திரிந்து படிஞ்ஞாயிறு என்று மலையாளத் தில் வழங்கப்படுகிறது. தீமை செய்வித்து என்பது மலையாளத்தில் தின்மை செய்விச்சு என்றாகிறது. இவ்வாறு தமிழில் கொச்சைச் சொற்கள் என வழங்கப் படுவனவெல்லாம் மற்ற திராவிட மொழிகளில் இலக்கண முடையதாகப் போற்றப்படுகிறது. மேலும் தெலுங்கில் உள்ள பகுதிகளும் விகுதிகளும் தமிழ்ச்சொற்களின் பகுதி விகுதி ஆகியவற்றின் மரூஉவாக மிகுதியும் உள்ளன.

திராவிட மொழிகளில் அகரம் தொலைவையும் இகரம் அண்மையையும் சுட்டுவன. இவற்றோடு பால் உணர்த்தும் விகுதியும் இடையே உடன்படு மெய்யும் வர அவன்” “இவன்’ என்ற சுட்டுப்பெயர்கள் ஏற்படு கின்றன. இவற்றிற்கு இணையாக உள்ள தெலுங்குச் சொற்களைக் காண்போம். தமிழில் அன் எனும் விகுதிக்கு இணையான தெலுங்கு விகுதி அடு, உடு என்பனவாம். எனவே தமிழில் அவ்+அன் என்பதற்கு, நேராகத் தெலுங்கிலும் அ+வ்+அடு= அவடு என்ற புணர்ப்பு உ ரு ைவ எதிர்பார்க்கலாம். ஆயின் இவற்றைத் தெலுங்கில் உள்ள ஆண்பால் சுட்டுச்சொல்