பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 37

ஆ) வடமொழியில் கர்ம என்பது மிகப் பழந்தமிழில் ‘கம் பழந்தமிழில் கன்மம். பிற்காலத் தமிழில்

கருமம்’

இ) பூர்வ ஆஷாடம் என்ற விண்மீனின் பெயர் தமிழில் “பூராடம் என்றாயிற்று. ஆஷாடம் என்ற வடசொல் ஆ ட ம் என்றாகிப் பின் ஆடி என்றாயிற்று.

ஈ) “அஸ்வினி’ என்பது ஐப்பசி ஆயிற்று.

உ) பூர்வ - பத்ர - பத’ என்பது பூ ர ட் ட தி:

புரட்டாசி’ என மருவிற்று.

7) தமிழில் மிகப்பழைய கல்வெட்டுக்கள் யாவும் தூய தமிழில் உள்ளன. ஆயின் தெலுங்கு. கன்னடம் போன்றவற்றின் கல்வெட்டுக்கள் வடமொழிச் சொற்கள் மிகுதியாக வரப்பெற்றும் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டும் உள்ளன.

8) தமிழில் உள்ள இலக்கிய இலக்கணப் பாகுபாடு கள் யாவும் மிகச்சிறப்பு உடையன. இலக்கியத்தை அகம், புறம் என்று பிரித்ததும், அகத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றும், புறத்தை வெட்சி, கரந்தை.நொச்சி, உழிஞை, வஞ்சி, காஞ்சி, தும்பை, வாகை, பாடாண். பொதுவியல் என்றும் பாகு படுத்தியதும் தமிழரின் அறிவைக் காட்டுவதோடு அவர் தம் பண்பாட்டையும் காட்டுகிறது. தமிழ் இயல், இசை, நாடகம் என்ற மூன்றாகக் கூறப்படுவதும் நோக்கத் தக்கது. அத்துடன் இலக்கணப் பாகுபாடான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐவகைப் பாகு பாடும் மிகத் தொன்மையானது; சிறப்புமிக்கது. பண் பட்டுச் சிறந்த உயர் தனிச் செம்மொழிகளிலேயே இத்தகைய பாகுபாடுகளைக் காணமுடியும். எனவே இப் பாகுபாடுகள் எல்லாம் தமிழின் பழமையைக் காட்டு கின்றன எனலாம்.