பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

சங்க இலக்கியம்

9) பல புராண இதிகாச குறிப்புக்கள் கூடத் தமிழின் தொன்மையைக் குறிக்கும். சான்றுகளாக ஒரளவிற்கு அமைகின்றன.

அ. வால்மீகி இராமாயணத்தில் கவாடம் என்ற கபாடபுரம் குறிக்கப் படுகின்றது. கபாடபுரம் கடல் கொண்ட பாண்டியனின் தலைநகரமாகும்.

ஆ. திரெளபதியின் திருமணத்திற்குச் சேர, சோழ, பாண்டியர் வந்திருந்தனர் என்பது மகாபாரதம் கூற்று.

இ. அர்ச்சுனன் பாண்டிய மங்கையாகிய சித்திராங் கதையை மணந்தான் என்பதும் பாரதக் குறிப்பு.

ஈ. உதியன் சேரலாதன் என்ற சேர அரசன் பாரதப் போரில் படைகளுக்கெல்லாம் உணவளித்தான் என ஒரு செய்தியும் காணப்படுகின்றது. புராண இதிகாசங்கள் எல்லாம் மிகப்பழமையானவை. அவை தமிழகத்தைப் பற்றியும் தமிழக அரசர்களைப் பற்றியும் கூறின என்றால் அது தமிழின் தொன்மைக்குச் சான்றாகாதோ?

10) வரலாற்று ஆசிரியர்களாய தாலமி, பிளினி, பெரிபுளூஸ் நூலாசிரியர் போன்றோர் நூல்களில் பல குறிப்புகள் தமிழகத்தைப் பற்றிக் காணப்படுகின்றன. மேலும் பாடலிபுரம், நந்தர், மெளரியர் பற்றிய குறிப்புக் கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்தரின் அமைச்சராய சானக்கியர் என்பார் “பாண்டிய கவாடகம் என்று தமது குறிப்பில் குறித்தார். கி.மு. 4ஆல் வாழ்ந்த வடமொழி அறிஞராய கார்த்தியாயனர் சோழ பாண்டியரைக் குறிக்கின்றார். கி.மு. 150 இல் வாழ்ந்த பதஞ்சலி என்பார் காஞ்சியைப் பற்றியும் கேரளத்தைப் பற்றியும் பேசுகின்றார்.