பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 39

11) தமிழர்கள் கி. மு. விலும், கி. பி.யிலும் செய்த வாணிகம் தமிழன் தொன்மைக்குச் சான்றாக உள்ளது. சுமேரிய நாட்டில் மலையாளத் தேக்கு, மஸ்லின் ஆடை கண்டு எடுக்கப்பட்டன. இவை தென்னாட்டினின்று கி.மு. 3000 இல் சென்றிருக்க வேண்டும் என்று கருது கின்றனர். கி.மு. 2600இல் யானைத்தந்தம், வாசனைப் பொருட்கள் முதலியவை எகிப்திற்குச் சென்றன என்பது ஆய்வாளா கருத்து. கி.மு. 1000இல் வாழ்ந்த சாலமன் அரசனுக்குத் தமிழகத்தினின்று பல பொருட் கள் சென்றன. ஹீப்ரு மொழியில் அப் பொருட்களைக்

குறிக்கும் சொற்கள் பல காணப்படுகின்றன. துக்’ (அ) துகி’ என்ற சொல் மயிலின்தோகையைக் குறிக் கின்றது. ‘அகிலின்’ ‘அகிலத்’ என்ற சொற்கள்

அகிலைக் குறிக்கின்றன. கி.மு. 30இல் உரோமப் பேரரசரான அகஸ்டளிக்குப் பாண்டியன் ஒருவன் தூது அனுப்பினான். கி.பி. முதல் நூற்றாண்டிலும் உரோம நாட்டிற்கு யானைத்தந்தம், முத்து. நெய், ஆட்டுமயிர். முதலியன அனுப்பப்பட்டன. உரோம நாடு முத்துக் களை மிகவிலை கொடுத்துத் தமிழகத்தினின்றும் வாங்குவதால் உரோம நாட்டின் செல்வம் குறை கின்றது என்று பிளினி வருந்துகிறார். கி.பி. 60இல் நூலாசிரியர் வாழ்ந்த பெரிபுளுஸ் தமிழகத்தின் பலதுறை முகங்களைக் குறித்துள்ளார். தமிழகத்திலும் மதுரை போன்ற தலைநகர்களில் யவனர் குடியிருப்புக்கள் இருந்தன. இவ்வாறெல்லாம் மிகப் பழமையான தமிழகத்தின் வாணிபத்தைக் குறிக்கின்ற குறிப்புக்கள் தமிழின் பழமைக்குச் சான்றாகின்றன.

12) தமிழரின் அரசியல்முறை மிகப்பண்பட்டது. நாடு, கோட்டம், சுற்றம், ஊர், சிற்றுார் என்றெல்லாம் பிரிக்கப்பட்டு அரசன், அமைச்சன், புலவன், மெய்க் காப்பாளர், சேனைத்தலைவர், காவலர் ஆகிய பலரை யும் கொண்டு இயல்வது தமிழரசு. தமிழனின் அரசியல்