பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

■ - - சில பார்வைகள் 41

வழங்கியுள்ளார். அவர் கருத்துப்படி ஆந்திரம் என்பது தெலுங்கைக் குறிக்க, திராவிடம் என்பது தமிழைக் குறிப்பதாகிறது.

இ) 1573இல் தாரநாத் என்பவர் எழுதிய புத்தமத நூலில் ‘திரமிள’ என்ற சொல் தமிழைக் குறிக்கிறது. தென்னாட்டு மக்களைப் பொதுவாகக் குறிக்கத் திரா விடர் என்ற சொல்லை வடநூல்கள் வழங்குகின்றன.

ஈ) தமிழில் உள்ள ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்கள் திராவிட வேதம் என்று குறிக்கப்படுதலும் உண்டு.

உ) சங்கராச்சாரியார் திருஞான சம்பந்தரைத் * திராவிட சிசு என்று குறிப்பிடுகின்றார்.

ஊ) விந்தியமலைக்குத் தெற்கே வழங்கிய மக்களை மகாராஷ்டிரர் ஆந்திரர் திராவிடர் கருநாடகர் கூர்ச்சரர் என்று பகுத்துப் பஞ்ச திராவிடர் என்று கூறும் மரபும் வடநூல்களில் காணப்படுகிறது. தமிழைத் திராவிடம் என்று குறிப்பிட்டமைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.

எ) தமிழ் என்ற சொல்லுக்கு நேரான வடசொல் திராவிடம் என்பதைக் கால்டுவெலும் எடுத்துக்காட்டி யுள்ளார். தமிழ், திராவிடம் என்பவை வேறுபட்ட இரண்டு சொற்கள் போலத் தோற்றமளிப்பினும் ஒன்றன் திரிபே மற்றது என்பதையும் அவர் உடன்படுகின்றார். ஆனால் திராவிடம் என்ற சொல்லே தமிழ் எனத் திரிந்தது என்ற கொள்கையைப் போற்றுகின்றார். திராவிடம், திரவிடம், தர்மிளோ, தமிளோ, தமிழ் எனப் படிப்படியே திரிந்திருத்தல்கூடும் என்கின்றார். பழைய Grmun jisod, ul-ri,46flö (The Peutinger Tables) sufifl:H என்ற பெயரும் சீன அறிஞர் ஹீயூன்சியாங் எழுதிய குறிப்பில் ட்சிமிமாலோ என்றபெயரும் தமிழுக்கு ஈடாக வழங்குவதையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

சங்-3