பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சங்க இலக்கியம்

மேலும் இராகவ ஐயங்கார் அவர்கள் கி. மு. 3ஆம் நூற்றாண்டு, 2 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் வளர்ச்சி யுறாத நிலையில் காணப்படுகின்றன; ஆகையால் நன்கு இலக்கண இலக்கிய வளம் செறிந்து விளங்கும் தமிழ் நூல்கள் கி. பி. 6ஆம் நூற்றாண்டிற்குமுன் தோன்றியிருக்க முடியாது என கருத்துத் தெரிவிக்கின்றார்.

கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளும் சொற் களும் இலக்கண அமைதி இல்லாதவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவற்றைக்கொண்டு இவை பொறிக்கப் பட்ட தமிழின் காலத்தை ஆராய்தல் தவறாகும். மேலும் இந்த பிராமிக் கல்வெட்டுக்கள் யாவும் சமணத்துறவிகளுக் கும் புத்த பிக்குகளுக்கும் குகைப் பள்ளிகள் அளந்து அளிக்கப்பட்ட செய்திகளையே குறிப்பிடுகின்றன. எனவே இத்னைக்கொண்டு சங்க காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு எனக் கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு

சங்க காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு என்று அறைய வருக்கு அரணாக நிற்பது அகநானூற்றில் காணப்படும் பாடலி அழிவுச் செய்தியாகும்.

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலி குழி இக் கங்கை நீர்முதற் கரந்த கிதயங் கொல்லோ

-அகம். 265

கங்கைக் கரையில் அமைந்த பாடலிபுரம் என்ற நகரானது வெள்ளப் பெருக்கால் அழிவுற்றது. அதன் காலம் கி. பி. 5ஆம் நூற்றாண்டு. மற்றொன்று சமுத்திர குப்தனின் தென்னாட்டுப் படையெடுப்பு. படையெடுப்பின் காலமும்