பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சங்க இலக்கியம்

தலைமுறை ஆசிரிய பரம்பரையில் வழங்கி வந்தபின் ஈடேறியதென அவ்வுரை வழங்குகின்றது. இதைக்கொண்டு தலைமுறை ஒன்றுக்கு 30 ஆண்டுகள் என வைத்துக் கொண்டாலும் பத்துத் தலைமுறைக்கு 300 ஆண்டுகளே னும் ஆகும் ஆதலின் நக்கீரர் காலமும் அவரிருந்த கடைச் சங்க காலமும் மாறவர்மன் காலத்திற்கு (760) 300 ஆண்டு கள் முற்பட்டது எனக் கருத்துத் தெரிவிக்கின்றார். இவரே மற்றோர் இடத்தில் இறையனார் களவியல் உரை 8 ஆம் நூற்றாண்டு எனக் கூறுகின்றார். இவர்தம் கருத்து களுக்குள்ளேயே முரண்பாடுகள் காணப்படுவதால் இக்கூற்று பொருந்தாது.

சங்க காலம் பற்றிக் கூறவரும் கா. சு. பிள்ளையவர் களின் கருத்து:

தமிழகத்திற் கடல்கோள்கள் நிலவின என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு செய்தியாகும். இதைப்பற்றிக் கூறும் போது கா. சு. பிள்ளையவர்கள, தலைச்சங்கம் கடல்கோட்கு முன்னிருந்த நாட்டில் நிலவியதென்பதும், கடல்கோள் நிகழ்ந்தபின் கடைச்சங்கம் நிறுவப்பட்டதென்பதும் களவியலுரை சிலப்பதிகாரம் முதலிய நூல்களால் தெளிவா கிறது. இதனை மறுத்தற்கும் போதிய சான்றுகள் இல்லை. தென்மதுரையில் நிலவிய ஒரு சங்கம் அவ்விடத்தை விட்டு கபாடபுரத்திற்குப் பெயர்வதற்குக் கடல்கோள் ஏதுவாகக் கூடிய ஒன்றே. கபாடபுரம் என்பது கடைச்சங்கத்துக் காலத் தில் இருந்ததாகத் தெரியாமையிலும் அவ் விடத்தைவிட்டுக் கூடலம்பதிக்குச் சங்கம் பெயர்வதற்கு ஏதுவும் கடற்கோளே என்று கோடல் மிகையாகாது’ என்றும் குறிக்கின்றார்.

தலைச்சங்கம் ஏற்பட்டதன்பின் நடந்த கடற்பெருக் கிலே பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் புக்கது. குமரியாறு கடல் புக்கதாகக் கூறப்படவில்லை. ஆதலால் இடைச் சங்க காலத்தில் குமரியாறு தென்னெல்லையாகப் பனம்பாரனரால் குறிக்கப்