பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம்

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரை கவென் நிலவரை

என்ற பாண்டியனின் பாடல் சங்கத்தைப் பற்றிக் குறிப்பதால் சங்ககாலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் குறிப்பர்.

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் (‘Tamil Eighteen hundred years ago") argårp 5T6660 assoró, சபைப் பிள்ளையவர்கள் கடைச்சங்க காலப் புலவர்களது எழுச்சியைக் குறித்து அதற்கேற்ப ஆண்டுகள் வரையறை செய்கிறார். எப்படி நோக்கினும் கி.பி. 300க்கு முன்னர் சங்கம் முடிவுற்றிருக்கலாம் என்பது உண்மை. இக் கருத்தை அரண் செய்வது போன்று சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில் பத்தினித் தெய்வத்திற்குக் கோயில் எடுத்தபோது இலங்கை மன்னன் கயவாகு வந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை வரலாறு கூறும் மகாவமிசம் என்னும் நூல் இம் மன்னனின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட óᏏITöa மாகச்சுட்டுகிறது.

சேரன் செங்குட்டுவன் சங்கம் மருவிய காலத்தவன். கயவாகு அவன் எடுத்த கோயிலைக் காண வந்தான் எனில் இருவரின் காலமும் சமகாலமே. எனவே இவர்க்கு முற்பட்ட கி. பி. 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை கடைச் சங்கம் இருந்திருக்கலாம் எனக் கருத இடமேற்

படுகின்றது.

உரோம நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருந்த வாணிபத் தொடர்பைப்பற்றி மேனாட்டு ஆசிரியர் கூறியனவற்றிற்கும் சங்க நூலாசிரியர் கூறுவனவற்றிற்கும் உள்ள ஒற்றுமை யினைக் கொண்டும் இதனைத் தெளியலாம். சில ஊர்ப் பெயர்களும் துறைமுகங்களின் பெயர்களும் இருநாட்டவரின் குறிப்புகளிலும் ஒன்று போலவே காணப்படுகின்றன.