பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 55

பொன்னொடு வந்து கறியொடு பெயர்ந்த செய்தி அகநானூற் றிலும் பெரிபுளுஸ் என்னும் நூலிலும் ஒன்று போலவே காணப்படுகிறது. இந்தக் கிரேக்க உரோம நூலாசிரியர்கள் கி. பி. 1ஆம் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். அகழ் வாராய்ச்சியின் மூலம் கிடைக்கும் நாணயங்களும் இக் கருத்தை வலியுறுத்துகின்றன. சங்க காலத்திலேயே வாணிகத் தொடர்பு உன்னத நிலையில் இருந்திருக்க வேண்டும். இதற்குப்பின் வாணிபச் சிறப்புப் பற்றிய செய்தி கள் காணப்படவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கி. பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த நேவா, திரேசன் என்ற மன்னர்களின் நாணயங்களே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இக் காரணங்களால் சங்க காலம் இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதல்ல எனத் தெளியலாம்.

கி. பி. முதல் நூற்றாண்டு

மதுரைத் தலபுராணம் குலசேகர பாண்டியன் முதல் மதுரேஸ்வர பாண்டியன் இறுதியாயுள்ள 74 பாண்டியரைப் பற்றிக் கூறுகிறது. ம து ேர ஸ் வ ர பாண்டியன் கூன் பாண்டியனின் மகன். கூன்.பாண்டியன் எனப்படும் நெடுமாறனின் காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டு என முடிவு செய்துள்ளனர். இவன் காலத்தில் சங்கம் இருந்தது என்பதற்கு எழுத்து மூலமான சான்றுகளோ பரம்பரைக் கதைகளோ இல்லை. மணிமேகலையும் சிலப்பதிகாரமும் சங்கத்தைப்பற்றிக் கூறவில்லை. ஆகவே சங்ககாலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குமுன் ஆதல் வேண்டும். கன்னபரம்பரைச் செய்தியின்படி சங்கத்தை ஆதரித்த இறுதி மன்னன் உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன். இவன் காலத்திலே திருக்குறள் சங்கத்தில் அரங்கேற்றப் பட்டது. தலபுராணத்தில் தமிழ் அரசர்கள் பெயர்கள் வடமொழியில் பெயர்க்கப்பட்டிருத்தலால் 74 அரசர்களில் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி எவன் என அறுதியிட