பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

தமிழ் இன்றும் தொன்மையானது. இதனைப்பற்றி இரண்டாவது கட்டுரை இயம்புகின்றது.

மூன்றாவது கட்டுரை, தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் சிறப்புக் குறித்தும் பேசுகின்றது. உலகின் பழைய மொழிகளில் தமிழ் ஒன்று. வழக்காற்றில் இக்காலத்தில் வாழும் மொழிகளில் தமிழே தொன்மையானது. (Tamil is the oldest of the present languages) arabrå குறிப்பிடுவர். வில்லிபாரதப் பாட்டு ஒன்றும் தண்டியலங் காரப் பாட்டு ஒன்றும் தமிழின் சிறப்புகளை உணர்த்துவன வாகும்.

நான்காவது கட்டுரை, சங்ககாலம் குறித்ததாகும். சங்க காலம் எந்த நூற்றாண்டில் தொடங்கி எந்த நூற்றாண்டில் முடிவுறுவதாகக் கருதலாம் என்பதற்கு அறிஞர் பெருமக்க ளிடையே பல்வேறு கருத்துகள் உள்ளன. கி.மு. 500 என்பாரும், கி பி. 9-ஆம் நூற்றாண்டு எனக் கூறுவாரும் உளர். விருப்பு வெறுப்பின்றி இன்று நாம் சங்க காலத்தைக் குறிப்பிடுகிறபொழுது, கி.மு. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை சங்கம் நிலவியது எனக் கொண்டு சங்க காலத்தைக் காலப்பகுதிகளாகக் கொள்ளலாம்.

பதிற்றுப்பத்து இலக்கியத்தில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. சேரப் பேரரசர்களைப் பற்றி எழுந்த நூல் இது. இதுபோன்று சோழருக்கோ பாண்டியருக்கோ தனி நூல் அமைந்தது இல்லை.

“வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ எனத் தொல்காப்பியம் பாராட்டும். அவர்தம் அடையாளப் பூமாலைகள்

‘போந்தை வேம்பே ஆரென வரூஉம்

மாபெருந் தானையர் மலைந்த பூவும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சேரநாடு நீர் வளமும் நில வளமும் ஊர் வளமும் மிகுந்தது. நுகர் பொருள்கள் மக்களுக்கு எளிமையாகக் கிட்டின. இதனை,