பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சங்க இலக்கியம்

சேரலாதனை முடிநாகராயர் பாடிய பாட்டொன்று உளது. அவர் தலைச்சங்கத்தைச் சார்ந்தவரெனின் பாரத காலத்திற்குச் சற்றுமுன்பு இருந்தவர் என்று கருதக் கூடும். பாரத காலம் கி.மு. 12ஆம் நூற்றாண்டு என அறிஞர் கருது கின்றனர். எனவே தலைச்சங்க காலம் கி. மு. 12 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பர் கா. சு. பிள்ளை அவர்கள்.

குமரி முனைக்குத் தெற்கிலிருந்த நாட்டிலே தலைச்சங்கம் இருந்ததாக அறிகின்றோம். அது எப்போது நிகழ்ந்ததென்று துணிதல் எளிதன்று. ஸ்காட் எலியட் என்பவர் சொல்கின்ற ஐந்தாவது கடல்கோள் ஏறக்குறைய 9500 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்ததாகும். அதுவே தலைச்சங்கத்திற்குப் பின் நிகழ்ந்த கடல்கோள் எனின் அத்துணைக் காலத்திற்கு முன்னமேயே தலைச்சங்கம் ஏறக்குறைய 4500 ஆண்டு 89 அரசர்களின் தொடர்ந்த ஆட்சியில் நடைபெற்றிருந்த தாகக் களவியலுரையால் அறிகின்றோம். முச்சங்கங்களுள் களவியலுரையில் கூறப்பட்டிருக்கும் கால அளவு சோதி வட்டக் கணக்கு என்பதில் வைத்துத் தீர்மானிக்கப்பட்ட தாகும். இதன்படி முதற்சங்கம் இருந்த காலம் 4440 என்பது மூன்று சோதி வட்டமாகும். இரண்டாவது சங்கம் நிலவிய காலம் 2; சோதி வட்டமாகும். மூன்றாவது சங்கம் நிலவிய காலம் 1; சோதி வட்டமாகும் எனக் கருத்துத் தெரிவிப்பர் கா.சு. பிள்ளை அவர்கள்.

சங்கம் 197 பாண்டியர்களால் ஆதரிக்கப்பட்டது. ஒரு அரசனின் ஆட்சிக்காலம் இருபது எனக் கொண்டு மொத்தம் 3940 ஆண்டுகள் என வரையறுக்கிறார் கந்தையா பிள்ளை அவர்கள். மேலும் தென்மதுரையில் இருந்த சங்கம் 89 பாண்டியர்களால் 1780 ஆண்டுகள் நடந்தன எனக்கொண்டு தென்மதுரையைக் கடல்கொண்ட காலம் கி.மு. 2160 எனக் கணக்கிடுகிறார். இக்கணக்கு கி.மு. 2105 இல் பெரிய வெள்ளப்பெருக்கு உண்டானது எனக் கூறும் யூதரின் காலக் கணக்கோடு ஏறக்குறைய ஒத்திருப்பதால் கி.மு. 3940இல்