பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 61

4. சங்ககாலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்க முடியாது என்ற கருத்து ஏற்புடையதாகவே காணப்படு கிறது.

5. கி.பி. 4ஆம் நூற்றாண்டாகச் சங்ககாலம் இருக்க முடியாது என்பதற்கு வித்தியானந்தன் அவர்கள் கருத்து பொருந்துவதாகவே தோன்றுகிறது.

6. கி.பி. 8ஆம் நூற்றாண்டாகச் சங்ககாலம் இருந்திருக்க லாம் என்பதற்குக் கா.சு. பிள்ளை அவர்களின் கருத்தும், டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர்கள் கூறும் கருத்தும் ஓரளவு ஏற்றுக்கொள்ளத் தக்கதாகத் தோன்றுகிறது.

7. பொதுவாக நோக்கும்போது சங்ககாலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி (அல்லது) இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்திருக்கலாம் என்ற கருத்தும், கி.பி. 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதி (அல்லது) முதல் நூற்றாண்டின் முற்பகுதியாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

>k **