பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

防6 சங்க இலக்கியம்

போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்

-தொல்; பொருள்; புறத்திணையியல்: 5.

என்று மூவேந்தரின் அடையாளப் பூமாலைகளும் குறிப்பிடப் பட்டுள்ளன. மூவேந்தரும் சேர மன்னர்கள் வானவன், வானவரம்பன். குட்டுவன், குடக்கோ, பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை என்னும் சிறப்புப் பெயர்களாலும், சேரல், சேரலர், சேரமான் என்னும் பொதும் பெயர்களாலும் வழங்கப்பெற்றனர்.

சேர வேந்தர் செய்யுட்கோவை என்னும் அரிய ஆராய்ச்சிப் பதிப்பு நூலை ஆக்கியளித்த பேராசிரியர் மு. இராகவைய்யங்கார், பாண்டிய நாடு ஐ ம் ப த் தா று காதமும், சோழநாடு இருபத்து நான்கு காத மும் பரப்பாகக் கொண்டிருக்கச் சேர நாடோவெனில் எண்பது காத அளவு பரப்புக்கொண்டது என்றும், தமிழகத்தை ஆட்சி புரிந்து வந்த மூவேந்தர்களுள் சேர வேந்தர் சிறக்க மதிக்கப் பெற்றமைக்கு அவர் நாட்டின் விரிவும், வளமும், வீரமும், தமிழ்ப்பற்றும் கொடையுமே காரணங்கள் என்றும் குறிப்பிடுவார்.

சேர நாடு நானில வளங்களும் நன்கு பொருந்திய நாடாகும். இரண்டாம் பத்தில் குமட்டுர்க் கண்ணனார் கடல்படு பொருளும், மலைபடு பொருளும் ஆறுபடு பொருளும் சேரநாட்டில் தட்டின்றிக் கிடைத்தன என்பதனை,

கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம் பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு

விழவறு பறியா முழவிமிழ் மூதூர்

–5: 16 - 18

என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் பத்துப் பாடிய பாலைக் கெளதமனார், சேரநாட்டு மகளிர் அவல் குற்றிய