பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 89

அடிகளிலும், வேலூரிலிருந்து ஆமூர் செல்லும் வழியில் உள்ள மருத நில வருணனை யை 178-195 வரை உள்ள அடிகளி லும் அமைக்கின்றார். கிடங்கில் நகர்ச்சிறப்பை 196-202 வரை உள்ள அடிகள் மொழிகின்றன. நல்லியக் கோடனின் இயல்புகள் 203.220 வரை உள்ள அடிகளில் கூறப்படுகிறது. யாழை இசைத்து அவன் சிறப்பினைப் பாட அவன் சிறுபாணனை உபசரித்துக் கொடை வழங்கிய செய்தியை 221-269 வரை உள்ள அடிகளால் தெளியலாம்.

பெரும்பாணாற்றுப்படை

காஞ்சியிலிருந்து அரசுபுரிந்த தொண்டைமான் பால் பரிசில் பெற்ற மீண்ட பாணன் ஒருவன் வறுமையால் வாடி வழியில் வந்த மற்றொரு பாணனை அத்தொண்டைமான் பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது. வந்த பாணன் பேரியாழினைக் கொண்டிருந்தமையின் பெரும்பாணாற்றுப் படை எனப்பட்டது. 500 அடிகளால் அமைந்தது. ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

பெரும்பாணாற்றுப்படை அமைப்பு

முதுவேனில் வருணனை, பேரியாழ் வருணனை, பெரும்பாணன் வறுமை இவை 22 அடிகளில் சித்திரிக்கப் படுகின்றன, பரிசில் பெற்ற பாணன் வறுமை நீங்கிப் பரிசில் பெற்று வரல், இளந்திரையன் சிறப்பு முதலியன 23 - 45 வரை உள்ள அடிகளில் பேசப்படுகின்றது. காஞ்சிக்குச் செல்லும் வழிகள், உமணர், வணிகர், வழிகள் மிளகு வாணிகம், உல்குடைப் பெருவழி, அரண்கள், முல்லைநில வருணனை, மருதநில வருணனை, மருதநிலத்தில் வலையர், பாணர் வாழ்க்கை, மறையவர் உறைபதி. நீர்ப்பெயற்று, பட்டினவளம் இவற்றை 46 முதல் 351 வரை உள்ள அடிகளில் விரிக்கின்றார். பட்டினத்திலிருந்து காஞ்சி

சங்-6