பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சங்க இலக்கியம்

. விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக் காட்டுதல்.

வாயுறை வாழ்த்து.

செவியறிவுறுTஉ.

. புறநிலை வாழ்த்து.

10. கைக்கிளை.

என்பன. இவற்றில் கொடுப்போர் ஏத்திக் கொடார் பழித்தல் என்றது கொடுப்போர் ஏத்தல் எனவும், கொடார் பழித்தல் எனவும், கொடுப்போர் ஏத்திக் கொடார் பழித்தல் எனவும் மூவகைப்படும் என்பது இளம்பூரணர்

உரை.

ப்

ப்

ப்

இவ்வாறே இயன்மொழி வாழ்த்தும், இயல்மொழி எனவும், வாழ்த்து எனவும், இயல்மொழி வாழ்த்து எனவும் மூவகைப்படும் எனவும் குறிக்கின்றார் அவர்.

கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தலும் அடுத்துர்ந் தேத்திய இயல்மொழி வாழ்த்தும் சேய்வரல் வருத்தம்விட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானும் கண் படை கண்ணிய கண்படை நிலையும் வேலை நோக்கிய விளக்கு நிலையும் வாயுறை வாழ்த்தும் செவியறிவுறு உம் ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் கைக்கிளை வகையொடு உளப்படத் தொகை இத் தொக்க நான்கும் உளவென மொழிப

என்பது தொல்காப்பிய நூற்பா.

மற்றொரு நூற்பாவில் மேலும் சில துறைகளைக் குறித்துச் செல்கின்றார்.