பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சங்க இலக்கியம்

இன்னோர் இன்னவை கொடுத்தார் நீயும் அன்னோர் போல அவை எமக் கீகென என்னோரும் அறிய எடுத்துரைத்தன்று மயலது சீர்த்தி மான்தேர் மன்னவன் இயல்பே மொழியினும் அத்துறையாகும்

என்ற கொளுக்களில் உணர்த்துகின்றார் ஆசிரியர் ஐயனாரித னார்.

பரிசில் விடை

தொல்காப்பியத்திலேயே இத்துறை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. புலவன் ஒருவன் பரிசில் பெற்ற பின்னரும், அவன் கொடுத்த மிக்கவளனை ஏத்தி வழக்கின்கண் தோன்றிய இருவகை விடையும் இருவகை விடையாவன தான் போதல் வேண்டும் எனக் கூறுதலும், அரசன் விரும்பப் போதலும் என்பன என்பது இளம்பூரணர் கருத்து.

பெற்றபின்வரும் பெருவளன் ஏத்தி நடைவயில் தோன்றிய விருவகை விடையும் என்பது தொல்காப்பியம்.

வேந்தன் உள்ளம் மகிழுமாறு அவனது வெற்றியால் உண்டாய புகழைக் கூறிய பரிசிலர்க்குப் பொருள் வழங்கி விடை கொடுத்தது பரிசில் விடை என்னும் துறை என்பது புறப்பொருள் வெண்பாமாலை காட்டும் பரிசில் விடைத் துறை விளக்கம். இதனை,

வேந்தன் உள்மகிழ வெல்புகழ் அறைந்தோர்க்கு ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று

என்ற கொளுவால் தெளியலாம்.