பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தமிழ் இலக்கியங்களில்

“முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்ப் பேர்த்தும் அப்பெற்றியதான மொழி தமிழாகும். இம் மொழியில் எழுந்துள்ள இலக்கியங்கள் தொன்மையும் சிறப்பும்கொண்டு துலங்குகின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி, இற்றைநாள் எழும் இலக்கியங் கள் வரை இயற்கையைப் பரவிப் போற்றி நிற்கக் காணலாம். சங்கத் தமிழகத்தே நாவீறு பெற்றுத் திகழ்ந்த நக்கீரர் முதல் இன்று வரை-அண்மைக்காலம்வரை நம்மிடையே வாழ்ந்து மறைந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரை வாழ்ந்த தமிழ்க் கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் இயற்கை வருண னைக்கென்ற இடம் ஒதுக்கியிருப்பதைக் காணலாம். இயற்கை மக்களுக்கு அளித்த கொடைகள் பலவென்றாலும் அவற்றுள் கதிரவன் தலையாய இடம் பெறுகிறான். கண்ணுள்ளவன் கதிரவனைக் காணாது இருக்க முடியா தன்றோ?

எனவேதான் சைவர் வீடுகளில் இன்றும் பாராயண நூலாகப் படிக்கப் பெற்றுவரும் திருமுருகாற்றுப் படையின் தொடக்கமே கதிரவனின் காட்சியாக அமையுமாறு நக்கீரர் பெருமான் நவின்றிருக்கக் காணலாம்.

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு

-திருமுருகாற்றுப்படை : 1-2