பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சங்க இலக்கியம்

இத் தொடக்கக் காட்சியின் சீர்மையே கண்களைக் கொள்ளை கொள்ளுகின்றது; நெஞ்சை அள்ளுகின்றது. உலகிலுள்ள மக்களெல்லாம் மகிழ்வதற்கு இடமாகக் கதிரவன் கடல் மீதிலிருந்து வான உச்சி முகட்டை நோக்கி எழுகிறான்; அப்போது அவன் பலரும் கையெடுத்துக் கும்பிடும் கடவுளாக-கதிரவனாக-பலர் புகழ் ஞாயிறாக விளங்கு கிறான் என்று நக்கீரர் பெருமான் கூறியிருப்பதனை நோக்கும்பொழுது நீலக்கடலே நீல மயிலாகவும், கோலக் கதிரவனே ஞானபண்டிதனாம் முருகனாகவும் காட்சியளிக் கும் வீறார்ந்த காட்சியினை விளங்க உரைத்திருக்கக் காணலாம்.

இது போன்றே இந் நூற்றாண்டில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமிழர்தம் பழமையைச் சுட்ட வரும் பொழுது தமிழ் மொழியின் தொன்மையைப் பொருத்தமுறப் பொருள்படக் கிளத்துகின்றார்.

தமிழ் நிலவுடனும், கதிருடனும், விண்ணுடனும், மேகத் துடனும், கடலுடனும், பிறந்ததாகவும், அத் தமிழ்மொழியைப் பேசும் தமிழர் உலகின் பழைமைப் பொருட்களாம் திங்கள், கதிரவன், வானம், நட்சத்திரங்கள், கடல், மேகங்கள் இவையே போன்று பழமை வாய்ந்தவர்கள் என்றும் இயைபு புலப்படுத்திப் பேசுகின்றார்.

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த

தமிழோடு பிறந்தோம் நாங்கள்

(-பாரதிதாசன் கவிதைகள்: முதல் தொ குதி) என்கிறார்.

கதிரவன் என்ற சொல் முதன்முதலாக மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெற்றிருந்தாலும், ஞாயிறு, உருகெழு மண்டிலம், உருப்பு அவிர் மண்டிலம், செழுங்கதிர் மண்டிலம், காய்ந்து செலல் கனலி, காய்கதிர், அகன்சுடர்