பக்கம்:சங்க கால மகளிர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

 மனைவியே என்று குறிப்பிட்டிருக்கும் செய்தியும் சங்ககால மகளிர், ச மு தா ய த் தி ல் பெற்றிருந்த இடத்தினைஉணர்த்துவனவாம்.'"

மகளிர் கல்விப் புலமை

ஐம்பது மகளிர்க்கு மேல் சிறந்த புலமை பெற்று நாநலம் வாய்ந்த புலவர்களாக விளங்கியிருக்கிறார்கள் என்பது சங்க இலக்கியப் புலவர் அட்டவணை (Table) யைப் பார்த்தே நன்கு அறிந்து கொள்ளலாம். இது, சங்க கால மகளிரின் கல்வி பற்றிய தகுதியினை எடுத்து மொழிவதாகும். அதியமான் தான் அரிதிற் பெற்ற நெடுநாள் வாழவைக்கும் நெல்லிக்கனியை ஒளவையாருக்கு வழங்கியதிலிருந்து பெண்பாற் புலவரை அக்கால அரசர்கள் போற்றிய திறம் உணரப்படும். 288 தொண்டைமானிடம் அதியமான் சார்பில் தூது சென்று ஒளவையார் அரசர் இருவர்க்கிடையே போர் மூளாத வண்ணம் செய்த அருள் தொண்டு பெரிதும் பாராட்டப்படும். '

பெண்வழிச் சேறல்

இனிப் பெண்வழிச் சேறலைப் பற்றி இவண் ஒரு சிறிது கூறவேண்டுவது அவசியம்.

'தன்வழி ஒழுகற்பாலள் ஆகிய மனைவி வழித் தான் ஒழுகுதல்' என்பர் பரிமேலழகர்.’’’

ஆணிற்குக் குடும்பக் கடமையும் உண்டு; பொதுக் கடமையும் உண்டு. திருவள்ளுவரின் காமத்துப்பாலில்


295. புறநானுாறு: 191: "மாண்டவென் மனைவி'

2.96. | Ho : 9 I 2.97. † = : 95. 298. திருக்குறள் : பெண்வழிச் சேறல்-அதிகார

விளக்கம்: பரிமேலழகர் உரை. சி. ப) , - 7