பக்கம்:சங்க கால மகளிர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

யும், விருந்து போற்றும் மனநலமும், சுற்றத்தினரைத் தழுவும் வழக்காறும் பிறவும் தலைமகளுக்குரிய தலையாய பண்புகள் என்று தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார்.

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறங் தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்.[1]

இல்வாழ்க்கையாகிய தேருக்கு அச்சாணியாக விளங்குபவள் தலைவியே ஆவள். “இல்லாள்” என்ற சொல் ‘இல்லத்தை ஆள்பவள்’ என்ற பொருளைத் தரும். மனையறம் நிகழ்த்தும் உரிமை மகளிர்க்கே வழங்கப்பட்டது. ‘மனைவி’ என்ற சொல்லும் தலைவியைக் குறிப்பதாகும். கணவனுக்குத் துணையாய் அமைந்து, பாரதியார்

காதலொருவனைக் கைப்பிடித்தே யவன்
காரியம் யாவினுங் கைகொடுத்து
மாதர றங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச் செய்து வாழ்வமடி.[2]


என்றபடி, அன்பினால் ஒன்றிவாழும் மகளிர் “ஒருமை மகளிர்”[3] என்றும், ‘வாழ்க்கைத்துணை’[4]


  1. தொல்காப்பியம்: கற்பியல்: 11
  2. பாரதியார் கவிதைகள்: பெண்கள் விடுதலைக் கும்மி: 8.
  3. “ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டாழுகின் உண்டு”-திருக் குறள்: 974.
  4. “மனத்தக்க மாண்புடையாள் ஆகித்தற்
    கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை” - திருக்குறள்: 51.