பக்கம்:சங்க கால மகளிர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


விருந்தோம்பல்:

திருவள்ளுவர் இல்லறவியலில் 'இல்வாழ்க்கை' யினைக் கூறி, அதனையடுத்து இல்வாழ்க்கைச் சிறப்பிற்கு இன்றியமையாத இல்லாளை 'வாழ்க்கைத் துணைநலம்’ என்று கூறி, அவ் இல்லாள் இனிதளிக்கும் 'மக்கட்பேற்றினை' அடுத்துக் கூறி, அடுத்து அன்புடைமையினையும், அன்பு மீதுர்ந்த வழி, போற்றப்பெறும் 'விருந்தோம்பலை" யும் உரிய இடந்தந்து போற்றியுள்ளார். எனவே தொல்காப்பியனார் விருந்தோம்புதல் தலைவியின்றி நிகழமுடியாதா கையின், தலைவியின் உயர் பண்புகளில் ஒன்றாகக் குறித்துள்ளார். 'விருந்து' என்ற சொல்லிற்குப் 'புதுமை’ என்று பொருள் கண்டுள்ளார் தொல்காப்பியனார்.[1]

இளங்கோவடிகளும் விருந்துபோற்றும் அறத்தினை இல்லற வாழ்வில் இணைத்துக் காட்டியுள்ளார்.

மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும்
விருந்துபுறங் தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்.

[2]

கண்ணகி, கோவலன் பிரிவால் அறவோர்க்கு அளித்தல், அந்தணரை ஆதரித்துப் போற்றல், துறவிகளை உபசரித்தல், பழமையான சிறப்பாகத் தொன்றுதொட்டு வரும் விருந்தோம்புதல் முதலிய இல்லறக் கடமைகள் இடையிடுபட்டுவிட்டன என்று வருத்தத்தோடு குறிப்பிடுகின்றாள்;

அறவோர்க் களித்தலும் அங்தன ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை.

[3]


  1. 96. தொல்காப்பியம்: செய்யுளியல்: 23 1
  2. 97. சிலம்பு: மனேயறம்படுத்த காதை: 85-86.
  3. 98. சிலம்பு: கொலைக்களக் காதை: 71.73 .