பக்கம்:சங்க கால மகளிர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

கெடுக சிங்தை கடிதிவள் துணிவே
மூதின் மகளி ராதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கிவள் தன்னை
யானை யெறிந்து களத்தொழிங் தனனே
நெருங்ல் உற்ற செருவிற் கிவள்கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே.
[1]


இப்பாடலைப் பாடிய புலவர் ஒக்கூர் மாசாத்தியார், பெண்பாற்புலவர் என்பது ஈண்டுக் கருதத்தக்கது. மறக்குடி மகளிருக்கும் வீரம் மிகுந்த சிறப்பு இதனால் துலங்குகின்றது,

மனைக்கு விளக்கம்:

எனவேதான் மகளிரை 'மனைக்கு விளக்கு' என்று போற்றிப் புகழ்ந்தனர்.[2] நான்மணிக்கடிகை எனும் நூலில்,

‘மனைக்கு விளக்கம் மடவாள்' [3]


என்றும்,

'மனைக்குப்பாழ் வாள் நுதல் மடவாள்'[4]

என்றும் குறிப்பிடுகின்றது. திருவள்ளுவர் புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகை


  1. 113. புறநானூறு: 279.
  2. 114. மனைக்கு விளக்காகிய வாணுதல்: புறம்: 314:1
  3. 115. நான்மணிக்கடிகை 105:1
  4. 116. நான்மணிக்கடிகை 22:1