பக்கம்:சங்க கால மகளிர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

54

  • ஒருங்குடன் மாய்க்த பெண்டிர்க் காயினும்......

சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்.'131

இன்றை நாளிலும் செய்தித் தாள்களில் கணவன் இறந்ததனைப் பொறுக்கலாற்றாத மனைவி சோர்ந்து உடனே உயிர்விட்டு இருவரும் ஒரே புதைகுழியில் அடக்கம் செய்யப்படும் நிகழ்ச்சியினைக் காணலாகும்.

இரண்டாவதாகிய உடன்கட்டை ஏறும்நிலை புறநா னுாற்றில் மேலும் சில பாடல்களால் தெரியவருகின்றது.

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் திருப்போர்ப் புறத்துப் பொருது இருவரும் இறந்தபொழுது அவர் உரிமை மகளிர் அனைவரும் உடன்கட்டை ஏறினர் என்று

புறநானூறு குறிப்பிடும்:


பெண்டிரும் பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி யாங்கமைங் தனரே..132

பொதியமலை சூழ்ந்த நாட்டையாண்ட ஆய் அண்டிரன் இறந்தானாக, அவனுடைய உரிமை மனைவியர் உடன் மாய்ந்தனர் என்று குட்டுவன் கீரனார் எனும் புலவர் குறிப்பிட்டுள்ளார்.'133

இவ்வாறு உடன்கட்டையேறும் வழக்கம் இடைக்காலத் திலும் இருந்த செய்தி இலக்கியத்தின் வழியும், கல்வெட்டுச் செய்தி வழியும் புலனாகின்றன.

131. மணிமேகலை 6:55-59. 132. புறநானூறு: 62; 13-15. 133. புறநானூறு 240.