பக்கம்:சங்க கால மகளிர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

==

55

திருதாவுக்கரச நாயனாரின் தந்தையார் புகழனார் இறந்தவுடன், அவர் மனைவி மாதினியாரும் உடன் இறந்ததாகப் பெரியபுராணம் கூறும்:

மற்றவர்தா முயிர் நீப்ப மனைவியாள் மாதினியார் சுற்றமுடன் மக்களையும் துகளாக வேநீத்துப் பெற்றிமையா லுடனென்றும் பிரியாத உலகெய்தும் கற்புநெறி வழுவாமற் கணவனா ருடன்சென்றார 134.

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் கி. பி. 957 முதல் 970 வரை சோழ நாட்டையாண்ட அரசனாவன். இவன் பொன்மாளிகைத் துஞ்சியபொழுது (இறந்தபொழுது) இவன் மனைவியருள் ஒருவராகிய வானவன் மாதேவியார் என்பார் உடன்கட்டை ஏறினார் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்ந்து பேசும். திருக்கோவலுர்க் கல்வெட்டு இவ்வருஞ் செயலைப் பின்வருமாறு கூறுகின்றது:

"செக்திரு மடங்தைதன் சீராஜ ராஜன் இந்திர சமானன் இராஜசர் வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்மான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த முன்னுமுகம் பிரிந்த முழங்கெரி நடுவணும் தலைமகற் பிரியாத் தையல் நிலைபெறுங் துரண்டா விளக்கு ... ... ... ...

மணிமுடி வளவன் சுந்தர சோழன் மந்தர தாரன் திருப்புய முயங்கும் தேவி.135

இதுபோன்றே முதல் குலோத்துங்கன் தேவி வீரமா தேவியாரும் உடன்கட்டை ஏறியதாக முதல் இராசாதி

134. பெரிய புராணம்: திருநாவுக்கரசநாயனார்

புராணம், 28

135 . M. E. R.