பக்கம்:சங்க கால மகளிர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

58

எனவே,_மனைவிக்கு மதிப்பளியுங்கள் : எளிய பாத் திரத்திற்கு இரங்குவது போன்றே மனைவியை நன்கு பரா மரியுங்கள்' என்கிறது விவிலிய நூலின் புதிய ஏற்பாடு.146 '"

தமிழ்நாடு உலகிற்கு வழங்கிய உலகச் சான்றோராம் திருவள்ளுவரும், 'நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பாாக்காமல் வாளா இருந்தால், அந்நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு மாறுபட்டு விடும்' என்றார்.

செல்லான் கிழவன் இருப்பின் கிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்.147 இதனால் மனைவிமாட்டுக் கணவன் இடையறாத அன்பு

செலுத்தி வேண்டுவன பேணித் தந்து விருப்புடன் போற்றி வர வேண்டும் என்பது பெறப்படுகின்றது.

எனவேதான் மனைவி என்ற அரிய செல்வத்தைப் பெற்றவன் வேறு எச்செல்வம் பெறாவிடினும் அதனாற் பேரிழப்பு ஒன்றுமில்லை. என்கிறார் திருவள்ளுவர். 148

இங்கர்சாலும், உண்மையான பெண்ணின் இதயத்தின்

சக்கரவர்த்தியாக ஓர் ஆண்மகன் இலங்குவானேயானால், அப்பெண்ணும் அவன் இதயத்தின் பேரரசியாக அமைந்து விடுவாளேயானால் அவன் சாய்க்கடையில் பிச்சைக்காரனாக மரித்தாலும் கவலையில்லை' என்கிறார்

"காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு

பட்டதே இன்பம்!149

என்பது அங்கை நெல்லிக்கணி.

=

146. “Giving honour unto the wife; as unto the weaker vesses” New Testeament, I,Peter H, 7. 147. திருக்குறள்:1039. 148. திருக்குறன்: 53.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென். இல்லவள் வின்னாக் கடை. 149. ஒளவையார்: தனிப்பாடல் திரட்டு முதற்

பாகம்9 பக்கம்:63