பக்கம்:சங்க கால மகளிர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


டாக்டர் என். சுப்பிரமணியம் அவர்கள், “சங்ககாலச் சமுதாயத்தில் மகளிர் நிலை இன்றுபோல் இருத்ததில்லை. ஆனால் அதே நேரத்தில் இன்றைய மகளிர் நிலையிலிருந்து பெரிதளவு வேறுபட்டும் இருந்ததில்லை” என்கிறார். [1]

மேலும் அவர் ‘பழந்தமிழகத்தில் மகளிர் நிலை’ (The status of Women in Ancient Tamisaham) என்ற தம்முடைய ஆராய்ச்சிக் கட்டுரையில், “சங்ககாலச் சமுதாயத்தில் ஆண்கள் மகளிர்க்குச் சற்றுத் தாழ்ந்த தகுதியினையே வழங்கினர் என்றும் அதை உணர்ந்தோ அன்றிப் பழக்கத்தாலோ மகளிர் தாமாகவே அந்நிலையினை ஏற்றுக் கொண்டனர் என்றும், இன்றுவரை அந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மகளிர்மாட்டு எழவில்லையென்றும், எனவே மகளிர் நிலை அன்றிலிருந்து இன்றுவரை குறிப்பிடத்தக்க எந்தவொரு மாற்றமுமின்றி இருந்துவருகிறது. (The Sangham society from the point of view of the sexes, was not an egalitarian society and the men granted a markedly inferior status to their woman who consciously or by habit accepted that position. There was no contemporary demand for a revision of that status on philosophical or even practical grounds; and tiil recently that position has remained without appreciable change”)என்றும் குறிப்பிட்டுள்ளார்.[2]

மறைந்த நம் பாரதநாட்டுப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் தம் ‘The Discovery of India’ என்னும் நூலில், பழங்காலச் சட்ட விற்பன்னர் மனுவின் காலத்தில் மகளிர் நிலை தாழ்ச்சியுற்றிருந்ததென்றும், ஆனால் காவியங்களில்.


  1. Dr. N. Subrahmanyam, Sangam Polity, P. 285.
  2. Dr. N. Subrahmanyam; - Journal of Indian History. Vol. XXXVIII, Part I, April, 1960, serial No. 112, P. 487,