பக்கம்:சங்க கால மகளிர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

இல்லத்திலும் சமுதாயத்திலும் மகளிர் மதிப்பானதோர் இடத்தினைப் பெற்றிருந்தனர் என்பது தெரிய வருவதாகவும், பழைய கிரேக்க உரோம நாகரிகங்களை நோக்க, மகளின் நிலை சற்று மேம்பாடுடனே திகழ்ந்ததாகவும் குறிப்பி்ட்டுள்ளார். “The legal position of women according to Manu, the earliest exponent of the Haw, was definitely bad. They were always dependent on somebody on the father, the husband, or the son. They were treated in law, a most as Chattels. And yet from the numerous stroies in the Epics this love was not applied very rigidly and they held an honoured place in the home and in society......Bad as the legal position of women was in ancient India. judged by modern standards, it was far better than in Ancient Greece and Rome; in early Christianity; in the Cannon law of medieval Europe; and indeed, right upto comparatively modern times at the beginning of the Nineteenth century.”[1]

சங்க காலத்தில் தமிழரிடத்து நிலவிய வீட்டு வாழ்க்கை (Home life among the Tamils in the Sangam age) என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றில் திரு. கே. ஞானாம்பாள் (K. Gnanambal) என்பவர் பின்வருமாறு கூறுவர்:

பெண் காதலின் ஊற்றாவள்; அவள் சுதந்திரமும், தனித்துவமும் பெற்றவள்; ஆணிற்குச் சமமாக மதிப்போடும் மரியாதையோடும் நடத்தப் பெற்றாள். அவள் குடும்ப பாரத்தைச் சுமக்கும் மிருகம் அல்லள். அவள் இன்றியமையாதவளும், ஆணின் சரிபாதியானவளும் ஆவள். சங்க காலத்தில் தமிழ்நாட்டில் பெண் மரியாதையாகவும் பொலி


  1. Jawaharlal Nehru, The Discovery of India, p. 107.