பக்கம்:சங்க கால மகளிர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மார்பை இவளுடைய முலைகள் தழுவின’ என்று தோழியர் கூறிய அளவில் அவனையே கணவனாக வரித்து விட்டாள். அருமறை தரல் வேண்டினாலும் உடனே தரக்கூடிய கற்புப் பெருமையையுடையவள் ஆகிவிட்டாள். அப்படிப்பட்டவள் பிறன் ஒருவனை மணக்க ஒரு போதும் துணியாள். மேலும் இம்மலையில் வாழ்பவர் அவள் காதலை அறியாது, நொதுமலர் வாழ்வுக்கு (stranger's life) ஈடுபடுத்துவார்களாயின் இனி மலைநாட்டிலே வள்ளியிலே கிழங்கு வீழாது; மலைமுகட்டில் தேன் கூடுகள் உண்டாகா; தினைக் கொல்லையிலும் கதிர்கள் வளமாகத் தோன்றா. மேலும் மலைநாட்டுப் பெண்கள் என்றும் பிழை செய்வதில்லை. கணவரைத் தொழுது எழும் அவர் தம் கற்புச் சிறப்பினால்தான் அவர்களின் அண்ணன்மாரும், தாம் குறி தப்பாது கணை செலுத்தும் ஆற்றலை உடையவராயிருக்கின்றனர்.” இவ்வாறு கூறித் தோழி அறத்தோடு நின்றாள். வேற்று வரைவு(marriage with a stranger) தலைவி தன் மனத்தில் வரித்த கணவனையே நினைவில் கைப்பிடிக்கும் நிலையினைப் பெற்றாள்.

குறுந்தொகைப் பாடலொன்றில் தலைமகன் தமர் (உறவினர்) தலைவியை மணம் பேசுதற் பொருட்டு வந்தாராக, “அவருக்கு நமர் (kith and kin) உடன்படுவார் கொல்லோ?” என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “நமர் உடன்பட்டனர்” என்று தோழி கூறும்பொழுது தலைவனுக்கு உன்னை உரிமை செப்பினர் என்று குறிப்பிடுகின்றாள்.[1]

இத்தொடருக்கு விளக்கம் எழுதியுள்ள தமிழ்த்தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் “துறைவர்க்கு


  1. ............ துறைவர்க்கு
    உரிமை செப்பினர் நமரே

    குறுந்தொகை: 351: 4-5