பக்கம்:சங்க கால மகளிர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

களாக அமைந்துள்ளன” என்பர். (“We have already seen how the parents, the neighbours, the sages and the hero bowed their heads in reverence to the noble quality of chastity. We have also seen that a girl after her association with a youth keeps her loyalty at all costs, even disregarding her parents and experiencing any amount of hardships. Therefore the main figure in Ahattinai around which all other figures revolve, and the chief quality to which all other qualities are attached are the heroine and her chastity”.[1])

அடுத்து, அகத்தினைப் பாடல்களில் பெண்ணொருத்தியைத் திருமணத்தில் பெற அப்பெண்ணின் பெற்றோர்களுக்கு விலையாகப் பொருள் கொடுத்த செய்தியினைக் காணலாம்.

சுற்றத்தார் வேண்டிய பொருளை நாட்டையே கொடுத்துத் தலைமகன் வரைவு (திருமணம்) மலிந்தான் என்று தோழி மகிழ்ச்சியுடன் தலைவிக்குக் கூறுகின்றாள் என்று ஐங்குறுநூறு குறிப்பிடுகின்றது. [2]

இதன் விளக்கவுரையில் ஐங்குறுநூற்றின் பழைய உரையாசிரியர், “உலகை வழங்க வேண்டும் உள்ளத்தன் அஃதின்மையால் நாட்டை வழங்கினான் என்பதாம்” என்று உரை கண்டுள்ளமையினை நோக்குக.


  1. Dr. V. Sp. Manickam, The Tamil concept of Love: p. 318.
  2. “எக்கர் ஞாழன் மலரின் மகளிர்
    ஒண்டழை யயருந் துறைவன்
    தண்டழை விலையென நல்கினன் நாடே”

    -ஐங்குறுநூறு: 14.7.