பக்கம்:சங்க கால மகளிர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

"கடல் சூழ்ந்த மண்டிலத்தையே பெறுவதாக இருந்தாலுங்கூடத் தலைவியின் காதலை அதற்காக இழக்க ஆயத்தமாக இல்லை" என்று தலைவன் ஒருவன் குறிப்பிடுகின்றான்.[1]

பிறிதொரு தலைவன் தலைவியோடு இனிது உறங்கும் நாட்களே பயனுடைய நாட்கள் என்றும், பிற நாட்கள் எல்லாம் பயனற்ற நாட்கள் (பதடிவைகல்) என்றும் குறிப்பிடுகின்றான். [2]

"தலைவியோடு ஒரு நாள் சேர்ந்து மகிழ்ந்து வாழ்ந்தால் போதும்; அதன் பின்னர் அரைநாள் வாழ்க்கைகூடத் தான் வாழத் தேவையில்லை" என்கிறான் பிறிதொரு தலைவன்.[3]

பட்டினப்பாலையில் இடம்பெறும் தலைவன் "முட்டுப் பாடில்லாத (தடைபடாத) சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினத்தையே பெறுவதாக இருந்தாலுங்கூடத் தன் நெஞ்சங் கவர்ந்த காதலியை விட்டு நீங்கி வரமாட்டேன்" என்கிறான். [4]

தேயாத காதல்

திருமண நாளின் போது தலைவன் தலைவியிடத்து எவ்வளவு அன்பு காட்டினானோ அதே போன்றே


  1. குறுந்தொகை : 300: 7-8
  2. "323.
  3. "280: 4-5
  4. பட்டினப்பாலை : 218-220.