பக்கம்:சங்க கால மகளிர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

யுடையவள் என்பதனால் மனை முதல்வி என்பதும், வாழ்க்கைக்குத் துணையாக அமைதலின் ‘வாழ்க்கைத் துணை’ என்பதும் முன்னரே பெறப்பட்டன.

இதற்கு மாறாக ஆணிற்கு, இல்லான் என்ற சொல்லோ, மனைவன் என்ற சொல்லோ, மனை முதல்வன் என்ற சொல்லோ யாண்டும் வழங்கப்படவில்லை என்பது கருதத் தக்கதாகும்.

மேலும் வீட்டின் கடை என்ற சொல், வீட்டின் தலை வாசலைக் குறித்து நின்றது என்பதும் பெறப்படுகின்றது. ஏனெனில் வீட்டில் மகளிர் புழங்கும் (வாழும்) பகுதி பின் பகுதியேயாதலின் அவர்கள் பெரிதும் புழங்கும் சமையற்கட்டு முதலான வீட்டின் பின்பகுதிகள் வீட்டின் முதலிடமாகக் கருதப்பட்டு, ஆண்கள் புழங்கும் வீட்டின் முன் பகுதி பின் பக்க மிருந்து நோக்கக் கடையாக அமைதலின் கடையெனப்பட்டது.

இந்த என் கருத்திற்குரிய சான்றினைச் சிறுபாணாற்றுப் படையிற் காணலாம்.

பல நாள் உண்ண உணவின்றிப் பசியால் வாடும் பாணர் குடும்பத்தின் வறுமை நிலையைச் சித்திரித்துக் காட்டுகிறார் சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார்.

“விடியாத கண்ணையுடையவாகிய சிறுகுட்டிகளை ஈன்றணிமையுடைய (Just delivered) நாய், அக்குட்டிகள் தம் பாலில்லாத வறுமுலைகளைச் சுவைத்தலின் துன்பத்தைப் பொறுக்கமாட்டாது துடிக்கின்றன. மேற்கூரைகளை மூங்கிலோடு பிணித்திருக்கும் கயிறுகள் அறுந்து விழுந்துள்ளன. சமையற்கட்டில் உள்ள அடுப்பு, காளான் (fungus) பூத்து வழக்கற்றுத் தற்போது நாய் வாழும் இடமாக உளது. அதுபோது உடல்

ச.ம.–6