பக்கம்:சங்க கால மகளிர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

ஒடுங்குவதற்குக் காரணமான பசியாலே வருந்தி மெலியும் நுண்ணிய இடுப்பினையும், வளையலை யணிந்த கையினையும் உடைய கிணைப்பறை கொட்டுவோனுடைய மனைவி, தன் நகத்தால் குப்பை மேட்டில் முளைத்திருக்கின்ற வேளைக் கீரையைப் பறித்துவந்து உப்பில்லாமல் சமைத்து வெந்த அக்கீரையினை, வறுமையுறுதலும் உலகில் இயல்பாக நிகழும் செயல் என்று அறியாது புறங்கூறித் திரிவோரால் தாம் காணப்படுதற்கு நாணப்பட்டுத் தம் வீட்டின் தலைவாசலையடைத்து, வறுமையால் வாடி நிற்கும் தங்களின் பெரிய சுற்றத்தினரோடு ஒன்றாக இருந்து கீரையுணவை உண்ணுகின்றார்கள்”[1]

இங்கே “கடை அடைத்து” என்பதற்குத் “தலைவாசலையடைத்து” என்று நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரை என் கருத்திற்கு அரண் செய்வதாகும்.

கற்பும் காரிகையும்

சங்ககால மகளிரும் அவர்தம் கற்பும் ஒருங்கே பலவிடங்களிற் பாராட்டப்பட்டுள்ளதனைக் காணலாம்.

“கடவுள் கற்போடு, குடிக்கு விளக்காகிய பிள்ளையைப் பெற்ற புகழ் மிகுந்த சிறப்பையுடைய நல்லவள்”றும்,[2]

“அடங்கிய கற்பும் ஒளிவிடும் நெற்றியும் உடைய பெண்” என்றும்,[3]

ஆறிய கற்பும் அடங்கிய மென்மைப் பண்பும், ஊடற்காலத்திலும் (during the time of sulkiness) இனிய


  1. சிறுபாணாற்றுப்படை; 130-139.
  2. அகநானூறு; 181: 1-3
  3. புறநானூறு; 249; 10-11