பக்கம்:சங்க கால மகளிர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

 என்றும் நிறையுடையார் என்றும் தமிழுலகங் கருதிற்று' என்றுரைப்பர், அரிய கருத்துகளை யெல்லாம் எளிய நடையில் விளக்கவல்ல என் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள்.'"

ஊடல் விளக்கும் தலைவி உரிமை

இவர்தம் கூற்றை நன்கு விளக்குவன சங்க இலக்கியத்தில் மருதத்திணையமைந்த பாடல்கள் ஆகும்.

பரத்தையர்ப் பிரிந்துவந்த தலைமகனைப் பார்த்து தலைவி ஊடிச் (கோபித்து) சொல்லும் சொற்களில் பெண்ணுரிமை பிறங்குகின்றது எனலாம்,

(1) உங்களை, இங்கே வரும்படியாகச் சொன்னது யார்? 217

(2) எமக்கு நீ என்ன உறவு உடையவன்? நீயோ பெரியவன்! துயரால் ஆற்றாது துடிக்கும் நான் என்ன உன் அடியாளோ? என்னைவிட்டு விலகிப் போவாய்

(3) யாரிவன்? என் கூந்தலை வந்து பற்றுகின்றான்? இதுவும் ஒர் ஊராண்மைக்கு ஒப்பான கொடுமையுடையது தான்! என் வீட்டிற்குள் வாராதே! வந்தது போலவே திரும்பிப் போய்விடுவாயாக'21"


216. கலித்தொகைச் சொற்பொழிவுகள்; ப; 63-64. 217. மருதக்கலி; 20; 30-31.

"தம்மை, வருகென்றார் யார்கொலோ ஈங்கு' 218. மருதக்கலி; 23; 3-4.

'தொடிய எமக்குநீ யாரை பெரியார்க் கடியேரோ ஆற்றா தவர்' 219. மருதக்கலி; 24; 1-3.

யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை வாரல்நீ! வந்தாங்கே மாறு'