பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

முரசினையுடைய மூவேந்தரும் வஞ்சித்து எம் தந்தையாரைக் கொன்றனர்; குன்றையும் கொண்டனர்,” என வருந்திப் பாடினர்.

புலமைப் பேறு இருந்ததுபோலத் தம் தந்தையார்போல ஈகைப் பண்பும் அமையப் பெற்றிருந்தனர் இம்மகளிர். இதற்குச் சான்றாக இவர்கள் செய்த அறச்செயல் ஒன்றே போதுமானதாகும். ஒருமுறை மழைபெய்தல் இன்றிப் பஞ்சம் நேர்ந்த போது, ஒரு பாணன் தம் வறுமை காரணமாக இவர்களிடம் இரந்துண்ண வந்தான். அன்னவனுக்குப் பொன்னீந்து சோறும் நல்கி உபசரித்தனர் எனப் பழமொழி நானூறு கூறுவதினின்றும் அறியலாம்.


கபிலர் பறம்பினை விட்டுப் பிரிதல்

கபிலரும் இனித் தமக்குப் பறம்பினிடத்து இருக்க இடம் இல்லையென உணர்ந்து, பிரிந்து செல்கையில் அப்பறம்பு மலையைப் பார்த்துக் கூறிய பாடல் உள்ளத்தை உருகச் செய்வதாகும். அவர் பறம்பை நோக்கி, "ஏ பறம்பே! நீ பாரி இருந்த காலத்தில் எம்மொடு நட்புச் செய்தாய். இப்பொழுது பாரி இறந்தமையால் நாங்கள் கலங்கிச் செயல் அற்று நீர்வார் கண்களையுடையவராய் நின்னைத் தொழுது வாழ்த்திச் செல்கிறோம். ஏ பறம்பே உன் தோற்றப் பொலிவை நாங்கள் என் என்பது? நீ உன்னை நெருங்கி நின்று காண்போர்க்கும் காட்சி அளிப்பை. சிறிது தொலைவு சென்று நின்று காண்போருக்கும் காட்சி அளிப்பை,” என்று கூறி வருந்தினார். இது பறம்பைப் புகழ்ந்ததாக