பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

மைகளை உணர்த்தினன். அதுகாலை ஒளவையார் இவனது செயல் கண்டு மனம் உவந்து வாழ்த்தினர். அவ்வாழ்த்து :

"போர்அடு திருவில் பொலந்தார் அஞ்சி !
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொல்நிலப்
பெருமலை விடர் அகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே”

என்பது. இவ்வாழ்த்தில் ஒரு நயம் தோன்றவும் ஒளவையார் வாழ்த்தினர். “நுதல்விழி நாட்டத்து இறைவனை சிவபெருமான்போல வாழ்க” என வாழ்த்தினர். அதன் கருத்து அவன் சாதற்குக் காரணமான நஞ்சினையுண்டும் சாகாது இறைமைப் பண்பு காட்டி நின்று அழியாது இருத்தல் போல, நீயும் அழியாது நிலைத்திருக்க என்பதாகும். அதிக மானின் பூத உடல் நீங்கினாலும் புண்ணிய உடலான நுண்ணுடல் இன்றும் நிலைத்திருக்கிறதன்றோ ? ஆகவே, அதிகமான் இரண்டாயிரஆண்டுகட்குமுன் இறந்தவனேனும் இறவாதவனே என உணர்க. இங்ஙனம் இறவாத இன்ப அன்பு இவன் எய்தப் பெற்றமையால்தான், ஒளவையாரே அன்றிப் பாணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார் போன்ற புலமைசான்ற புலவர் பெருமக்களால் பாடும் பேறு பெற்றவனானான்.