பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. vii பொருநைத்தேன் கரையினிலே பொலிந்து நின்ற பூரணனின் திருவுளத்தை ஏற்றே ஆங்கோர் திருப்புளியின் கிளையினிலே தொட்டில் கட்டித் திருக்கண்கள் விழியாத இவரை வைத்துக் குருகூர்க்கு விடைகொண்டார் பெற்றோர்! அன்றே குவலயம்நல் லருள்பெற்ற பனிரண் டாம்நாள்: ஒருமுேைபால் யோகநிலை கூடப் பெற்றே உணர்வொன்றிப் பதினாறாண்டிருந்தார் ஐயர்' வடதிசைக்கண் இருக்கின்ற திருக்கோ யில்கள் மாண்பெல்லா மறிந்தவற்றை வணங்கச் சென்ற திடமுடைய மதுரகவி அயோத்தி தன்னைச் சேவித்துத் திரும்பிடுமோர் இரவு தன்னில் கடலெழுந்த பகலவனின் ஒளிபோல் விண்ணில் கண்டனரோர் பேரொளியைத் தெற்குத் திக்கில்! "சுடர் இதுவேன்? காடெரியும் ஒளியோ? அன்றிச் சுற்றியுள்ள சிற்றுார்தான் எரியும் தீயோ?” என வியந்தார்! பின்னிரண்டு மூன்று நாட்கள் இவ்வாறே ஒளிகாட்ட இதுவென்-தேர்வோம்’ எனவெழுந்தார்! இரவெல்லாம் நடந்து பன்னாள் எழிலரங்கம் தனையடைந்தார். அதற்கும் அப்பால் மனமடங்காப் பேரொளிதான் இருக்கக் கண்டு மாமதுர கவிமீண்டும் நடக்க லானர்! வனம்,ஆறு கடந்தேயின் குருகை சென்றார், மற்றந்த ஒவியங்கே மறைந்த தோர்ந்தார்: ஊரெல்லாம் தேடிப்பின் அனந்தாழ் வானாம் உறங்காத புளியின்கீழ் வீற்றி ருக்கும் மாறர்தம் யோகநிலை கண்டு) இவர்தாம் மானுடரன் றென்றுணர்ந்தார்.அவர்முன் னங்கோரி