பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 63 வாயிலில் அமைக்கப்பெற்றுள்ள தகரக் கொட்டகை கோயிலின் எழிலையும் காம்பீரியத் தோற்றத்தையும் கெடுத்து விடுகின்றது. திருக்கோயிலின் கருவறையிலுள்ள மூலவர்-வைகுந்த நாதன் நல்ல சிலை வடிவில் அமைக்கப் பெற்றுள்ளார். உற்சவர் கண்ணபிரான் அர்த்த மண்டபத்தில் உபய பிராட்டிமார் இருபுறமும் இருக்க, கையில் கதையுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மூலவர் அருகில் தேவிமார் இல்லை. இவரைப் பற்றிய இதிகாசம்; சோமுகாசுரன் என்பவன் ஒர் அசுரன். அவன் நான்முகனிட மிருந்த நான்மறைகளையும் பறித்துச் சென்று விடுகின்றான். அதனால் மனங்கவன்ற நான்முகன் வைகுந்த நாதனை நோக்கித் தவம் செய்கின்றான். நான்முகனின் தவததிற்கு இரங்கி மகிழ்ந்த எம்பெருமான் பெரிய திருவடியின் மீது ஏறி வந்து சோமுகாசுரனை வென்று நான்மறைகளையும் அவனிடமிருந்து பெற்று அவற்றை நான்முகனிடமே தந்து விடுகின்றான். நான்முகன் பொருட்டு அவசரமாக எழுந்தரு ளிய காரணத்தால் தேவிமார் இன்றித் தன்னந்தனியாக எழுந்தருளியுள்ளான். இந்த எம்பெருமானையே பால் பாண்டியன்’ என்றும் வழங்கி வருகின்றனர். வரலாறு இது; பண்டு நான்முகன் வழிபட்ட வைகுந்த நாதன் பின்னர் எப்படியோ சிறிது காலம் மண்ணுக்குள் மறைந்து விடுகின்றான். அப்படி மறைந்திருக்கும் இடத்தில் அக்கம் பக்கத்தில் மேய்த்து கொண்டிருக்கும் பசுக்கள் பால் சொரியத் தொடங்குகின்றன. ஆநிரைகளை மேய்க்கும் ஆயர்கள் இச்செய்தியை அரசனிடம் தெரிவிக்கின்றனர். அரசனும் அதிசயத்துடன் அவ்விடம் போந்து ஆட்களை விட்டு மண்ணைத் தோண்டிப் பார்க்கின்றான். மண்ணுக்குள் மறைந்திருந்த வைகுந்தநாதனை வெளிக்கொணர்ந்து அவன் இருந்த இடத்தில் கோயில் எடுப்பிக்கின்றான்; வழிபடு கின்றான். இது காரணமாக இன்றும் இவனுக்குப் பால்