பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சடகோபன் செந்தமிழ் படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே -திருவாய் 8.3 5 (மடியாது - இடம் வலம் கொள்ளாமல்; இன்னே - இன்று காண்பது போலவே, மேவி - விரும்பி: அல்லல் - துன்பம்; அசைவு - அயர்ச்சி, பணியாய் கூறியருள வேண்டும்.) என் பாசுரத்தை அருளுகின்றார். என்றைக்கு இங்கே திருக் கண் வளர்ந்தருளப் புகுந்தானோ அன்று முதல் இன்று வரை ஆடாமல் அசையாமல் சயனித்திருக்கின்றானே! இஃது என்ன சிரமமோ?’ என்று கருதுகின்றார். எம்பெருமான் இப்படித் திருக்கண் வளர்வது நம் போன்ற நிலவுலகத் தவர்கட்கன்றோ? அதனை அறிந்து அவர்கள் பரிந்து ஈடுபட வேண்டும். அங்ஙனம் ஈடுபடக் காணாமையால் எம்பெருமான் இப்படிக் கிடப்பதை விட்டு எழுந்து போக வேண்டியதே அவன் மேற்கொள்ள வேண்டிய செய்கை. அப்படி எழுந்து போகாமல் இருப்பது என்றேனும் யாரேனும் ஒருவர் பரியக் கூடும் என்றே கிடக்கின்றான்' என்று ஆழ்வார் கருதுகின்றார். நாமும் அப்படித்தான் நினைக்கின்றோம். இவ்விடத்தில் "கடந்த கால்கள் கொந்தவோ?’ (திருச்சந் 61) என்ற திருமழிசையாசின் பாசுரம் அநுசந்திக்கத்தக்கது. அடுத்து இத்தலத்து எம்பெருமான்மீது ஆழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் நம் மனத்தில் எழுகின்றன. பண்டைகா ளாலே கின்திரு வருளும் பங்கயத் தாள்திரு வருளும் கொண்டுநின் கோயில் சீய்த்துப்பல் படிகால் குடிகுடி வழிவந்தாட் செய்யும்